‘விஸ்வாசம்’ வெற்றியை தொடர்ந்து இந்தி படமான பிங்க் ரீமேக்கில் அஜித் நடித்து வருகிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ பட இயக்குநர் எச்.வினோத் இயக்கும் இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யா பாலன் நடிக்கிறார்.
’தல 59’ என்று அழைக்கப்பட்டு வந்த இப்படத்தின் தலைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நேர்கொண்ட பார்வை’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதோடு, படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், படத்தை அஜித்தின் பிறந்தநாளான மே 1 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
90களின் இறுதியில் மற்றும் 2000களின் தொடக்கத்தில் தனது மென்மையான நடிப்பால் ரசிகர்களை வசீகரித்த நடிகர் அபாஸ், பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ் சினிமாவிற்கு திரும்பி வருகிறார்...
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’...
விஜய் ஆண்டனி நடிப்பில், அருண் பிரபு இயக்கத்தில், ஷெல்லி காலிஸ்ட் ஒளிப்பதிவில், பாத்திமா விஜய் ஆண்டனி கம்பெனி, விஜய் ஆண்டனி பிலிம் கார்பரேஷன் நிறுவனம் சார்பாக மீரா விஜய் ஆண்டனி வழங்கும் படம் “சக்தித் திருமகன்”...