ஓபன் தியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தமிழினி, லிங்கவேலன், சுகதேவ் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம் ‘காக்கி’. இதில் விஜய் ஆண்டனி மூன்று வித்தியாசமான தோற்றங்களில் நடிப்பதோடு, சத்யராஜும் இரண்டு வித்தியாசமான தோற்றங்களில் நடிக்கிறார். இவர்களுடன் ஜெய், ஈஸ்வரி ராவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
இப்படத்தில் வரும் முதன்மை கதாபாத்திரங்கள் ஒவ்வொருவரின் கதையமைப்பும் காக்கி துணையை மையப்படுத்தி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். முற்றிலும் புதிய கோணத்தில் உருவாகும் இப்படத்தை வாய்மை படத்தை இயக்கிய அ.செந்தில்குமார் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் சென்னை ஏவிஎம் ஸ்டுடியோவில் தொடங்கியது. படத்தின் முதல் காட்சியை விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் சத்யராஜ், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன் சிவா, பெப்ஸி சிவா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
மனோஜ் பரம்ஹம்சா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அவ்ஹத் இசையமைக்கிறார். வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ரூபன் படத்தொகுப்பு செய்ய,, குமார் கலையை நிர்மாணிக்கிறார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...