‘ஸ்கேட்ச்’ பட இயக்குநர் விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது.
60 க்கும் மேற்பட்ட வெற்றிப் படங்களை தயாரித்த பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. பி.நாகி ரெட்டியாரின் நல்லாசியுடன் பி.வெங்கட்ராம ரெட்டி வழங்க, விஜயா புரொடக்ஷன்ஸ் சார்பில் பி.பாரதி ரெட்டி தயாரிக்கும் இப்படம் அவரது 6 வது படமாகும்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் நிவேதா பெத்துராஜ் என இரண்டு நாயகிகள் நடிக்கிறார்கள். இவர்களுடன் சூரி, நாசர், அசுதோஷ் ராணா, ரவி கிஷான், மொட்டை ராஜேந்திரன், மாரிமுத்து, ஜான் விஜய், ஸ்ரீமான் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
விவேக் - மெர்வின் இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். எம்.பிரபாகரன் கலையை நிர்மாணிக்க, அனல் அரசு ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார்.
இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஐதராபாத்தில் தொடங்கியது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...