கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு மகாசிவராத்திரி விழா நேற்று ஈஷா யோகா மையத்தில் கொண்டாடப்பட்டது. இதில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் கலந்துக் கொண்டார்கள்.
நடிகர் ராணா, நடிகைகள் சிஹாசினி, சுகி சாவ்லா, தமன்னா, காஜல் அகர்வால், அதிதிராவ் உள்ளிட்ட பல சினிமா நட்சத்திரங்களும் இவ்விழாவில் கலந்துக் கொண்டார்கள்.
நடிகைகள் தமன்னா, காஜல் அகர்வால், அதிதி மேனன் ஆகியோர் மாலை 4 மணியளவில் ஈஷா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை முன்பு செல்பி எடுத்துக் கொண்டனர். பிறகு இரவு நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவின் போது சத்குரு நடனமாடிய போது, தமன்னா, காஜல் அகர்வால் உள்ளிட்ட பல நடிகைகளும், அங்கிருந்தவர்களும் நடனம் ஆடினார்கள்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...