ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படமாக உருவாகும் ‘ஐபிசி 376’ (IPC 376) படத்தில் நந்திதா ஸ்வேதா ஆக்ஷன் அவதாரம் எடுத்திருக்கிறார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் அவர் நடிக்கிறார்.
இப்படத்திற்கு சூப்பர் சுப்பராயன் மாஸ்டர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைப்பதோடு, வித்தியாசமான வேடம் ஒன்றிலும் நடிக்கிறார்.
ஹீரோக்கள் பண்ண வேண்டிய கதை, ஆனா ஹீரோக்கள் பண்ண முடியாத கதை. இப்ப சமூக வலைதளங்கள் தான் பரபரபா இயங்கி கொண்டிருக்கு. டைட்டிலை வலைதளத்தில் தேடும்போதே இது எது சம்மந்தமான கதை என்பதை யூகித்து விடுவார்கள். ஆனால், என்ன கதை என்பதை யூகிக்க முடியாது. பெண்களை இழிவுப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கு மத்தியில், பெண்கள் கொண்டாட வேண்டிய ஒரு படமாகவும் இப்படம் உருவாகிறது.
சஸ்பென்ஸ், த்ரில்லர் என்பதையும் தாண்டி யூகிக்க முடியாத இன்னொரு விஷயமும் இப்படத்தில் ஹைலைட்டாக இருக்குமாம்.
பிரபு சாலமன், பாலசேகரன் போன்ற இயக்குநர்களிடம் பல படங்களில் பல மொழிகளில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ராம்குமார் சுப்பராமன் இயக்கும் இப்படத்திற்கு கே.தில்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். கோலமாவு கோகிலா பட எடிட்டர் ஆர்.நிர்மல் படத்தொகுப்பு செய்கிறார்.
96, ஜுங்கா, பென்சில் போன்ற பல வெற்றிப் படங்களை விநியோகம் செய்த எஸ்.பிரபாகர் இப்படத்தை தயாரிக்கிறார். இவர் முன்னணீ டிஸ்ட்ரிபியூட்டராக இருப்பதோடு, பல தியேட்டர்களை நடத்தி வரும் எக்ஸிபிட்டராகவும் இருக்கிறார்.
விநியோகத் துறையில் வெற்றி பெற்ற எஸ்.பிரபாகர், முதல் முறையாக தயாரிக்கும் இப்படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிக்கிறார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...