தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழி சினிமாவிலும் மீ டூ புகார் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது டிவி ஏரியாவிலும் மீ டூ புகார் தலை தூக்க தொடங்கியிருக்கிறது.
இந்தி டிவி சேனலை சேர்ந்த பிரபல சீரியல் நடிகை டீனா தத்தா, தனது நடிக்கும் சக நடிகர் மோஹித் மல்ஹோத்ரா மீது பரபரப்பு பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்.
’தாயன்’ என்ற சீரியலில் நடித்து வரும் டீனா தத்தா, நெருக்கமாக நடிக்கும் காட்சியில் நடிகர் மோஹித் மல்ஹோத்ரா, தன்னை கண்ட இடங்களில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், அவர் திட்டமிட்டே தன்னிடம் சில்மிஷம் செய்வதை அறிந்ததால், இது குறித்து தயாரிப்பாளரிடம் புகார் கொடுத்ததாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால், இதை மறுத்திருக்கும் மோஹித், டீனா முதலில் தனக்கு தொல்லை எதுவும் நடக்கவில்லை என்று சொன்னார். இப்போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சொல்லியிருக்கிறார். படப்பிடிப்பில் என்னால் அவருக்கு எதாவது அசவுக்கரியங்கள் ஏற்பட்டிருந்தால், அதை அப்பவே என்னிடம் சொல்லியிருக்கலாமே, இப்போது ஏன் சொல்கிறார், என்று விளக்கம் அளித்திருக்கிறார்.
டீனா தத்தாவின் இந்த பாலியல் புகார் குறித்து சீரியல் குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...