‘அடங்காதவன் அசராதவன் அன்பானவன்’ படத்தின் தோல்விக்கு பிறகு சிம்பு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போய்விடுவார் என்று பேசப்பட்ட நிலையில், தற்போது தொடர் வெற்றிப் படங்களை கொடுக்க ஆரம்பித்துவிட்டார். தற்போது ‘மாநாடு’ படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் சிம்பு, இந்த ஆண்டு தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார்.
இதற்கிடையே, ஹன்சிகாவின் ‘மஹா’ படத்தில் சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் சிம்பு, மீண்டும் ஹன்சிகாவுடன் இணைந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதே சமயம், காதல் தோல்விக்கு பிறகு திருமணம் குறித்து பேசுவதையே சிம்பு தவிர்த்து வருகிறார்.
சிம்புவின் தம்பியான குறளரசன் சமீபத்தில் இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளார். இதற்கு காரணம், அவர் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண்ணை காதலிப்பதாகவும், விரைவில் அவருக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்பட்டது.

இந்த நிலையில், குறளரசனின் திருமண ஏற்பாடுகளை படு ரகசியமாக செய்து வரும் டி.ராஜேந்திர், வரும் ஏப்ரல் 26 ஆம் தேதியன்று குரளரசனுக்கும், அவரது காதலிக்கும் திருமணம் செய்து வைக்கப் போகிறாராம். மிகவும் எளிமையான முறையில் சிம்புவின் வீட்டில் நடைபெற இருக்கும் இந்த திருமணத்திற்கு நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அழைக்கப்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...