நடிகர் தனுஷ் தங்களது மகன் என்றும், அதனால் அவர் தங்களின் பராமரிப்பு செலவுக்கு பணம் வழங்க உத்தரவிட வேண்டும் என்று கோரி, மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள எம்.மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
ஆனால், இந்த வழக்கில் உண்மை இல்லை, எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று தனுஷ் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, தனுஷ் தங்களது மகன் தான் என்பதற்காக ஆதாரத்தை கதிரேசன் - மீனாட்சி தம்பதியினர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். அதேபோல் தனுஷ் தரப்பிலும், ஆதாரம் தாக்கல் செய்யப்பட்டது. மேலும் தனுஷின் அங்க அடையாளங்களையும் நீதிபதிகள் நேரில் பரிசோதித்தனர்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தனுஷ் கதிரேசன் - மீனாட்சி தம்பதியின் மகன் இல்லை, என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், கதிரேசன் - மீனாட்சி தம்பதி மீண்டும் தனுஷுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அந்த மனுவில், நடிகர் தனுஷ் தாக்கல் செய்த பிறப்பு மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்று தெரிவித்துள்ளனர்.
'இறுதிப் பக்கம்' திரைப்படத்தைத் தயாரித்த இன்சாம்னியாக்ஸ் ட்ரீம் கிரியேஷன்ஸ் எல்...
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...