தென்னிந்திய திரையுலகில் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் ரம்யா கிருஷ்ணன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என பல மொழிகளில் நடித்து வருபவர், சுமார் 36 வருடங்களாக சினிமாவில் பயணித்துக் கொண்டிருக்கிறார்.
ஹீரோயின், வில்லி, குணச்சித்திர வேடம் என்று தற்போதும் கலக்கிக் கொண்டிருக்கும் ரம்யா கிருஷ்ணன், ‘பாகுபலி’ படத்தில் ராஜமாதா சிவகாமி வேடத்தில் நடித்து மீண்டும் தன்னை நிரூபித்திருப்பவர், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில், தியாகராஜா குமாரராஜா இயக்கத்தில் உருவாகும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் ஆபாச பட நடிகை வேடத்தில் நடித்து வருகிறார்.
விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்கும் இப்படத்தில் சமந்தா, பகத் பாசில் உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் சம்மந்தமான ஒரு காட்சியை மட்டும் இரண்டு நாட்களாக படமாக்கியிருக்கிறார்கள். 37 டேக்குகளுக்கு பிறகே அந்த காட்சி ஓகே செய்யப்பட்டுள்ளது.
படத்தின் மிக முக்கியமான காட்சியான அக்காட்சிக்காக இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, ரம்யா கிருஷ்ணனை இரண்டு நாட்களாக வாட்டி வதைத்திருக்கிறார்.
ஒரு காட்சிக்காக இயக்குநர் இப்படி மெனக்கெட்டாலும், இரண்டு நாட்களாக படப்பிடிப்பு நடத்தியும் திருப்தியடையாததால் ரம்யா கிருஷ்ணன் ரொம்பவே அப்செட்டானாலும், அதை வெளிக்காட்டாமல், பொருமையாக இருந்து இயக்குநர் திருப்தியாகும் வரை திரும்ப திரும்ப அந்த காட்சியில் நடித்தாராம். அப்படி 37 டேக்குகள் போன பிறகே ரம்யா கிருஷ்ணனின் நடிப்பை இயக்குநர் ஓகே செய்திருக்கிறார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...