Latest News :

சீரியல் பாதிப்பால் உருவான ‘நீயா 2’ கதை! - உண்மையை உடைத்த இயக்குநர்
Monday March-11 2019

தமிழ் சினிமாவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு உருவாகும் பாம்பு படம் தான் ‘நீயா 2’. ஜெய் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் வரலட்சுமி சரத்குமார், கேத்ரின் தெர்சா, ராய் லட்சுமி ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருக்கிறார்கள். ‘எத்தன்’ படத்தை இயக்கிய எல்.சுரேஷ் இப்படத்தை இயக்குகிறார்.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக இயக்குநர் வெற்றிமாறன் கலந்துக் கொண்டார்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், ”சுரேஷ் நானும் ஒன்றாக பணியாற்றியிருக்கிறோம். தொடர்ந்து போராடிக்கொண்டே இருப்பார். சுரேஷ் சோர்வடைந்து நான் பார்த்தது கிடையாது. எந்த சூழ்நிலையிலும் உறுதியைக் கைவிடமாட்டார். வெற்றிக்கு எது ஏற்றதோ அதை சிறப்பாக செய்யகூடிய ஆற்றல் அவரிடம் இருக்கிறது. இப்படத்தைப் பார்க்கும் போது வெற்றியடையும் என்று தோன்றுகிறது.” என்றார்.

 

நடிகை ராய் லட்சுமி பேசும் போது, “2 வருடங்களுக்கு பிறகு தமிழில் நடிக்கிறேன்.  சுரேஷ் கதை கூறினார். 3 மணி நேரம் கதை கேட்ட பிறகு இது பெரிய படமாக இருப்பது போல் உள்ளது. அதை கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று பொறுமையாக ஆலோசித்து முடிவெடுத்தேன். பாம்பை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம். பேய் படங்களுக்கு நிறைய வாய்ப்பு வந்தது. ஆனால் இப்படத்தின் காதல், திரில்லர் அதனுடன் பாம்பு கதை. இப்படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி.” என்றார்.

 

இசையமைப்பாளர் ஷபீர் பேசும் போது, ”நான் சிங்கப்பூரில் படித்து வளர்ந்ததால், இங்கு பேசும் தமிழைப் புரிந்து கொள்வதில் சிரமம் இருந்தது. கிராபிக்ஸ் மற்றும் காட்சியமைப்பிற்கு ஈடு கொடுக்கும் வகையில் இசையமைக்க வேண்டும். அதேபோல் இப்படம் எனக்கு சவாலாக இருந்தது. மகுடி மட்டுமல்ல பாம்பிற்கு ஏற்ற வகையில் இசையை எப்படி அமைக்க வேண்டும் என்று நிறைய கற்றுக்கொண்டேன்.” என்றார்.

 

இயக்குநர் எல்.சுரேஷ் பேசுகையில், ”பாலுமகேந்திராவிடம் நானும் வெற்றிமாறனும் உதவியாளராக இருந்தோம். எனது முதல் படம் தெலுங்கு. அதன் தமிழ் பதிப்பு தான் 'எத்தன்'. ஒரு இயக்குநருக்கு படம் என்பது எந்தளவு முக்கியம் என்று அவர்களுக்கு மட்டுமே தெரியும். அதேபோல் என் முயற்சியின் மேல் எனக்கு மிகுந்த நம்பிக்கை இருந்தது. பாம்புக்கு படம் பண்ணனும் என்று கூறினார். பாம்புக்கு எப்படி படம் பண்ணுவது என்று யோசிக்கும் போது தொலைக்காட்சியில் 'நாகினி' தொடரைப் பார்த்தேன். சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. பிறகு தான் இந்த கதை தோன்றியது. 

 

'நீயா' படத்தில் நிஜ பாம்பை தான் காட்டியிருப்பார்கள். அதேபோல் இப்படத்திலும் ராஜநாகத்தை வைத்து இயக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காக பாம்பைப் பற்றி தெரிந்துகொள்ள பாங்காக்கிற்கு சென்றோம். அங்கு ராஜநாகத்தை வீட்டில் வைத்து வளர்த்து வருகிறார்கள்.

 

ஒரு நண்பரிடம் பாம்பு படத்தை காட்டினேன். அவர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. நிஜ பாம்பு இப்படி இருக்காது என்றார். பாங்காக்கில் இருக்கும் பாம்பின் படம் தான் இது என்றேன். ஆகையால் இப்படத்தில் கிராபிக்ஸ் இல்லாமல் நிஜ பாம்பை தான் காட்டியிருக்கிறோம்.

 

இப்படத்தில் நிஜ வில்லன் மழை தான். ஆகையால், படப்பிடிப்பை மிகுந்த சிரமத்திற்கிடையில் தான் நடத்தினோம். 

வரலட்சுமிக்கு கடினமான கதாபாத்திரம் கொடுத்திருக்கிறோம். அவரும் சிறப்பாக நடித்திருக்கிறார். 

 

'எத்தன்' முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக இருந்தது. இப்படம் ரொமான்டிக் திரில்லராக இருக்கும். இப்படம் பெரியதாக அமைய காரணம் ஜெய், கேத்தரின் தெரசா, வரலட்சுமி, ராய் லட்சுமி தான். அவர்களை கொடுத்த தயாரிப்பாளருக்கு நன்றி.” என்றார்.

 

லேட்டாக வந்த ஜெய் பேசும் போது, “தாமதமாக வந்ததற்கு மன்னிக்கவும். வேறு படத்தின் படப்பிடிப்பில் இருந்ததால் தாமதமாகிவிட்டது. இப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். வாய்ப்பு கொடுத்த அனைவருக்கும் நன்றி.” என்றார்.

Related News

4352

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery