பி ஸ்டார் புரொடக்ஷன்ஸ் சார்பில் 50 பேர் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘நெடுநல்வாடை’. இப்படத்தை இயக்கியிருக்கும் செல்வக்கண்ணனுடன் கல்லூரியில் படித்தவர்கள் தான் இப்படத்தை தயாரித்திருக்கிறார்கள்.
பூ ராம், இளங்கோ, அஞ்சலி நாயர், அஜய் நடராஜ், மைம் கோபி, ஐந்து கோவிலான், செந்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜோஸ் ஃபிராங்க்ளின் இசையமைக்க, வைரமுத்து பாடல்கள் எழுதியிருக்கிறார்.
வரும் மார்ச் 15 ஆம் தேதி வெளியாகும் இப்படம் குறித்து இயக்குநர் செல்வகண்ணன் பேசுகையில், “எல்லோரோட வாழ்க்கைக்கு பின்னாடியும் யாரோ ஒருத்தரோட தியாகம் இருக்கும் என்னோட இந்த நெடுநல்வாடை படத்திற்கு பிறகு என் நண்பர்களின் தியாகம் இருக்கு. அந்த தியாகம் தான் இந்த படத்தின் கதை.
இந்த படம் பார்க்கிறவர்கள் இந்த மாறி ஒரு வாழ்கையை வாழ்ந்திருப்பீர்கள் அல்லது இப்படி ஒரு வாழ்கையை வாழ முடியாமல் போய்விட்டதே என்று ஏங்கி இருப்பீர்கள்.
இது 75 சதவீதம் உண்மை கதையை மையமாக வைத்து உருவாக்கபட்ட படம். பூ ராமை நான் ஒவ்வொரு காட்சியிலும் என் தாத்தாவைத்தான் பார்த்தேன்.

சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்டு பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்ட இப்படம் அடுத்த வாரம் மார்ச் 15 அன்று ரிலீஸாகிறது. பிரபல தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்டிஸ்ட்ஸ் பி.மதன் இப்படத்தை ரிலீஸ் செய்ய உதவி புரிந்து வருகிறார்.” என்றார்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...