Latest News :

குடி போதையில் அடிதடியில் ஈடுபட்ட நடிகர் விமல் கைது?
Monday March-11 2019

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வரும் விமல், மது போதையில் நடிகர் ஒருவரை கடுமையாக தாக்கிய விவகாரம் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது.

 

பெங்களூரை சேர்ந்த புதுமுக நடிகர் அபிஷேக் என்பவர், விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர் ‘அவன் அவள் அது’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

 

நேற்று அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் அமர்ந்து போனில் பேசிக் கொண்டிருந்த அபிஷேக்கை, நடிகர் விமல் மற்றும் அ4 பேர் சேர்ந்து அடித்திருக்கிறார்கள்.

 

இதில், நடிகர் அபிஷேக்கின் நெற்றி, கண், கை, கால் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற அபிஷேக், இது தொடர்பாக விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

 

புகாரில், மது போதையில் இருந்த நடிகர் விமல், அவரது ஆட்களும் என்னை தாக்கினர். அவர்கள் மீது உரிய நடவடிகை எடுக்க வேண்டும், என்று தெரிவித்திருந்தார்.

 

இதனை தொடர்ந்து, ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல் ஆகிய இரண்டு சட்ட பிரிவுகளின் கீழ் விமல் மீது வழக்கு பதிவு செய்திருக்கும் போலீசார், இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க முடிவு செய்திருப்பதோடு, நடிகர் விமலை கைது செய்யும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related News

4354

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery