பிக் பாஸ் டைடில் வின்னர் ஆரவ் ஹீரோவாக நடிக்கும் படம் ‘ராஜபீமா’. மனித, விலங்கு முரணை பேசும் படமாக உருவாகும் இப்படத்தில் ஹீரோயினாக ஆஷிமா நர்வால் நடிக்க, ஓவியா சிறப்பு தோற்றம் ஒன்றில் நடிப்பதோடு, ஒரு பாடலுக்கு குத்தாட்டமும் போட்டிருக்கிறார். எஸ்.மோகன் தயாரிக்கும் இப்படத்தை நரேஷ் சம்பத் இயக்குகிறார்.
பாலக்காடு, பொள்ளாச்சி, தாய்லாந்து என பல இடங்களுக்கு பயணித்து படப்பிடிப்பு செய்து மிகப்பெரிய சவால்களை சந்தித்த இப்படக்குழு தற்போது முழு படப்பிடிப்பையும் திருப்திகரமாக முடித்திருக்கிறார்கள்.
இது குறித்து இயக்குநர் நரேஷ் சம்பத் கூறுகையில், “ஆம் உண்மையிலேயே பல்வேறு இடங்களில், குறிப்பாக அடர்ந்த காடுகளில் படப்பிடிப்பை நடத்தியது மிகப்பெரிய சவாலாக இருந்தது. சில விஷயங்களை காகிதங்களில் கதையில் எழுதும்போது நன்றாக இருக்கும், ஆனால் படப்பிடிப்பில் எதிர்பாராத அனுபவங்களை சந்தித்தது, தாண்ட முடியாத பெரிய தடையாக இருந்தது. குறிப்பாக, யானையுடன் நடித்த நாயகன் ஆரவ்விற்கு இது கடினமாக இருந்தது. அவர் படப்பிடிப்புக்கு முன்பே யானையுடன் நட்பாக இருந்த போதிலும், முற்றிலும் எதிர்பாராத விஷயங்கள் இருந்தது. காடுகளில் வழுக்கும் பாறைகள் மற்றும் தரைகள் இன்னொரு தடங்கலாக இருந்தது. இருப்பினும், படப்பிடிப்பை சிறப்பாக முடித்து விட்டு வந்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம்.” என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.மோகன் கூறுகையில், “படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை உடனடியாக ஆரம்பித்து, செய்து கொண்டு இருக்கிறோம். கோடை விடுமுறையில் படத்தை வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.” என்றார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...