80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ராதிகா, தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி என்று பல மொழிகளில் பல வெற்றிப் படங்களில் நடித்திருக்கிறார். ஹீரோயினாக மட்டும் இன்றி குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டியவர், சின்னத்திரையில் ராணியாக திகழ்கிறார்.
‘சித்தி’ சீரியல் மூலம் நெடுந்தொடர்களுக்கு புதிய பரிணாமத்தை கொடுத்த ராதிகா, தொடர்ந்து அண்ணாமலை, வாணி ராணி, செல்வி உள்ளிட்ட பல சீரியல்களில் கதாநாயகியாக நடித்ததோடு, சின்ன பாப்பா பெரிய பாப்பா, சிவமயம், ருத்ரவீணை போன்ற காமெடி மற்றும் பேண்டசி தொடர்களை தயாரித்தும் இருக்கிறார்.
தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சந்திரகுமாரி’ தொடரில் நடித்து வரும் ராதிகா, மொத்தமாக 6,850 எப்பிசோடுகள் கதாநாயகியாக நடித்துள்ளார். இத்தனை எப்பிசோடுகள் நடித்த ஒரே நடிகை இவர் தானாம். அதாவது மொத்தமாக 3,430 மணி நேரம் சின்னத்திரையில் நடித்திருக்கிறாராம்.
இத்தகைய பெருமையை பெற்றிருக்கும் ராதிகா, திடீரென்று நடிப்புக்கு பிரேக் போட்டுள்ளார். ஆம், அடுத்த இரண்டு மாதங்களுக்கு எந்த தொடரிலும் நடிக்காமல் பிரேக் எடுக்க முடிவு செய்திருப்பவர், பிறகு ஜூன் மாதத்தில் இருந்து புதிய பரிமாணத்தில் நடிக்க இருக்கிறாராம்.
அநேகமாக கதாபாத்திரத்திற்காக உடல் எடையை குறைப்பதற்காகவே ராதிகா, இரண்டு மாதங்கள் பிரேக் எடுப்பதாக கூறப்படுகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...