பிக் பாஸ் சீசன் 2-வின் ரன்னரான ஐஸ்வர்யா தத்தா தனது பாய் பிரெண்ட் என்று சொல்வதோடு அவரது பெயரை கையில் பச்சை குத்திக் கொண்டு இருந்த கோபி என்ற கோபி கிருஷ்ணன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நிறுவனங்கள் நடத்தியது, வங்கியில் கடன் பெற்று தருவதாக கூறி மக்களை ஏமாற்றியது என்று பல்வேறு மோசடி வழக்குகள் கோபி கிருஷ்ணன் மீது பதிவு செய்யப்பட்டிருப்பதோடு, அவருடன் தொடர்பில் இருப்பவர்கள் அனைவரையும் கைது செய்ய இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கோபி கிருஷ்ணனின் நிறுவனங்களில் ஐஸ்வர்யா தத்தாவுக்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுவதோடு, பிக் பாஸ் மூலம் அவருக்கு கிடைத்த பப்ளிசிட்டியை வைத்து வெளிநாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி கல்லா கட்ட கோபி கிருஷ்ணா திட்டமிட்டிருந்தாராம். அப்படி ஒரு வெளிநாட்டு கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய போது தான் அவரை சென்னை விமான நிலையத்தில் வைத்து போலீஸ் கைது செய்திருக்கிறது. அப்போது அவருடன் ஐஸ்வர்யா தத்தாவும் உடன் இருந்துள்ளார்.
இது தொடர்பாக கடந்த ஆண்டே விகடன் இணையதளத்தில் கட்டுரை வெளியான நிலையில், தற்போது கோபி கிருஷ்ணா கைது செய்யப்பட்டிருப்பதால், அவரை தொடர்ந்து ஐஸ்வர்யா தத்தாவும் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.
ஆனால், தனக்கும் கோபி கிருஷ்ணன் என்பவருக்கும் எந்த தொடர்பும் இல்லை, என்று ஐஸ்வர்யா தத்தா கூறுவதோடு, இது குறித்து பேசுவதற்கும் மறுப்பு தெரிவித்து வருகிறார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...