சினிமா நடிகர்களும், நடிகைகளும் சர்ச்சையில் சிக்குவது அடிக்கடி நிகழும் சம்பவங்கள் தான் என்றாலும், தற்போது தெலுங்கு சினிமாவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் தொழிலதிபர் சிக்ருபதி ஜெயராம் படுகொலையில் பிரபல நடிகையும், நடிகரும் சிக்கியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கோஸ்டல் பேங்க், எக்ஸ்பிரஸ் டிவி ஆகியவற்றின் இயக்குநராக இருக்கும் சிக்ருபதி ஜெயராம், கடந்த ஜனவரி 31 ஆம் தேதி விஜயவாடா அருகில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் வைத்து கொலை செய்யப்பட்டார்.
இந்த கொலை சம்பவம் குறித்து விசாரணை நடத்திய காவல் துறை, தற்போது தெலுங்கு சினிமாத் துறையை சேர்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளது.
ஏற்கனவே, இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியாக ராகேஷ் ரெட்டி என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது இளம் காமெடி நடிகர் சூர்யா பிரசாத், அவரின் உதவியாளர் கிஷோர் மற்றும் அஞ்சி ரெட்டி என்ற நடிகையும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தொழிலதிபர் படுகொலையில் நடிகர், நடிகை சம்மந்தப்பட்டிருப்பதும், அவர்கள் கைதாகியிருப்பதும் தெலுங்கு சினிமாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...