Latest News :

ராஜமெளலி இயக்கத்தில் சமுத்திரக்கனி! - ரூ.300 கோடியில் உருவாகும் பிரம்மாண்ட படம்
Friday March-15 2019

வசூலில் பல சாதனைகளை படைத்த ‘பாகுபலி’ மற்றும் ‘பாகுபலி 2’ படங்களை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமெளிலி இயக்கும் அடுத்தப் படத்திற்கு ‘ஆர்.ஆர்.ஆர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ரூ.300 கோடி செலவில் பிரம்மாண்ட படமாக உருவாகும் இப்படத்தை டி.வி.வி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கின்றது. 

 

அல்லூரி சீதாராமாக நடிகர் ராம் சரணும், கோமரம் பீம்மாக நடிகர் ஜுனியர் என்.டி.ஆரும் நடிக்கும் இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜய் தேவ்கன் மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். நாயகிகளாக பாலிவுட் நடிகை அலியா பட், இங்கிலாந்து நாட்டின் நடிகை டெய்ஸி எட்கர் ஜோன்ஸ் நடிக்கிறார்கள்.

 

இரண்டு புகழ்பெற்ற சுதந்திர போராட்ட வீரர்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் ‘ஆர்.ஆர்.ஆர்’ திரைப்படம் 1920 களில் பின்னணியில் பிரம்மாண்டமாக உருவாகின்றது.

 

தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளில் உருவாகும் இப்படம் 2020 ஆம் ஆண்டு, ஜூலை 30 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

 

RRR

 

பட தலைப்பு பற்றி கூறிய படக்குழு, “’ஆர்.ஆர்.ஆர்’ என்ற தலைப்பு அனைத்து மொழிகளுக்கும் பொதுவாக வைக்கபட்டிருக்கும் படத்தலைப்பு. இருப்பினும், மொழிகளுக்கு ஏற்றவாறு படத்தின் தலைப்பு சுருக்கப்பட்டிருக்கும். ரசிகர்கள் படத்தின் தலைபை விரிவாக்கம் செய்து அவர்களது அபிமான படத்தலைப்புகளை #RRRTitle என்ற ஹஷ்டக்குடன் ட்வீட் செய்யலாம், அவர்களின் தலைப்பு படத்திற்கு சரியாக தலைப்பாக இருந்தால் அதையே படத்தின் தலைப்பாக சூட்டூவோம்” என்று தெரிவித்துள்ளனர்.

Related News

4366

’ஹவுஸ் மேட்ஸ்’ பார்வையாளர்களுக்கும் முக்கியமான படமாக இருக்கும் - நடிகர் காளி வெங்கட்
Monday July-28 2025

சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...

மக்கள் கொடுத்த வரவேற்பால் பல மொழிகளில் டப்பாகும் ‘சட்டமும் நீதியும்’ இணையத் தொடர்!
Monday July-28 2025

18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில்,  அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...

சமுத்திரக்கனி நடிப்பில் உருவாகியுள்ள ஆன்மீக திரைப்படம் ‘ராகு கேது’!
Monday July-28 2025

தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...

Recent Gallery