தொடர் தோல்விப் படங்களை கொடுத்தாலும் ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு பட வாய்ப்புகள் வந்துக் கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில், சசி இயக்கத்தில் ஒரு படத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் சித்தார்த்தும் நடிக்கிறார்.
இப்படத்திற்கு ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சித்தார்த் டிராபிக் போலீஸாகவும், ஜி.வி.பிரகாஷ் பைக் ரேசராகவும் நடிக்கிறார்கள்.
இந்த நிலையில், மலையாளத்தில் பிரபல நடிகையாக உள்ள லிஜோ மோள், ’சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தில் ஜி.வி.பிரகாஷுக்கு தம்பியாக நடிக்கிறார். லிஜோ மோளுக்கு ஜோடியாக சித்தார்த் நடிக்கிறார்.
அக்கா, தம்பி பாசத்தை சொல்லும் கதையம்சம் கொண்ட இப்படம் ‘பிச்சைக்காரன்’ படத்தை போல இயக்குநர் சசிக்கு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...