17 வருடங்களாக தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் திரிஷாவின் மார்க்கெட் சரிந்த நேரத்தில் ‘96’ திரைப்படம் மீண்டும் அவரது மார்க்கெட்டை தூக்கி நிறுத்தியுள்ளது. தற்போது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் திரிஷா முன்னணி ஹீரோக்களுடன் மட்டும் இன்றி இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து வருகிறார்.
தெலுங்கு நடிகர் ராணாவும் திரிஷாவும் காதலிப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து இருவரும் டேட்டிங் செய்ததாக ராணாவே பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், ராணாவும், திரிஷாவும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, சென்னையை சேர்ந்த தொழிலதிபரும், திரைப்பட தயாரிப்பாளருமான வருண் மணியனோடு காதல் கொண்ட திரிஷாவுக்கு அவருடன் திருமண நிச்சயதார்த்தமும் நடைபெற்ற நிலையில், திடீரென்று இருவரும் பிரிந்ததோடு, திருமணமும் நின்றுவிட்டது.
இதற்கு காரணம், தான் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை வருண் மணியன் குடும்பம் ஏற்கவில்லை, அதனால் தான் திருமணத்தை நிறுத்தினேன், என்று திரிஷா கூறினார். வருண் மணியன் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் கூறவில்லை.
அதே சமயம், தனது திருமணம் நின்றது குறித்து பேட்டிகளில் பேசி வந்த திரிஷா, திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடிப்பேன், பிரசவ காலத்தில் மட்டுமே நடிப்புக்கு ஓய்வு அளிப்பேன், மற்றபடி தான் இறக்கும் வரை நடித்துக் கொண்டு தான் இருப்பேன். தற்போது திருமணம் பற்றி எதுவும் யோசிக்கவில்லை, என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில், திரிஷா தனது திருமணம் குறித்து திடீரென்று அறிவித்திருக்கிறார். அதாவாது, இப்போதைக்கு தான் யாரையும் காதலிக்கவில்லை, சரியான ஒருவரை சந்தித்தால் நாளையே திருமணம் செய்ய தயார், என்று திரிஷா சமீபத்திய பேட்டியில் கூறியிருக்கிறார்.
அப்படியானால், திரிஷா தற்போது திருமணத்திற்கு தயாராகிவிட்டார் போல, அந்த சரியான நபர் யார் என்பதை எப்போது அறிவிப்பாரோ!
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...