ரசிகர் மன்றங்களே வேண்டாம், என்று அறிவித்த நடிகர் அஜித்தை, அவ்வபோது சில அரசியலுக்கு அழைக்கிறார்கள். மேலும், அவரது ரசிகர்கள் என்று கூறிக் கொண்டு பலர் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் அஜித்துக்கு சில நேரங்களில் தலைவலியை கொடுக்கிறது.
அதற்காகவே, கடந்த ஆண்டு தனக்கும் அரசியலுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை, ஒருபோதும் தான் அரசியலுக்கு வர மாட்டேன், என்று அஜித் அதிகாரப்பூர்வமாக அறிக்கை வெளியிட்டார்.
இந்த நிலையில், பிரபல திரைப்பட இயக்குநரான சுசீந்திரன், அஜித்தை அரசியலுக்கு அழைத்திருப்பதோடு, தமிழக அரசியலில் அஜித் ஒருவரால் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும், என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை வெளியிட்டிருக்கும் சுசீந்திரன், அதில், ”40 ஆண்டுகால திராவிட அரசியலில் மாற்றத்தை உருவாக்க உங்கள் ஒருவரால் மட்டுமே முடியும். தமிழக மக்களின் நலன்கருதி உங்களை மக்கள் பணிக்கு அழைக்கிறேன்.
இது தான் 100 சதவீத சரியான தருணம், வா...தலைவா மாற்றத்தை உருவாக்கு...உங்களுக்காக காத்திருக்கும், பலகோடி மக்களில் நானும் ஒருவன்.” இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...
தமிழரசன் தியேட்டர் தயாரிப்பில், தமிழ்மாமணி துரை பாலசுந்தரம் இயக்கத்தில், தமிழில் 35 வருடங்களுக்குப் பிறகு புராணக்கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள படம் ’ராகு கேது’...