லல்லுசாமி பிக்சர்ஸ் தாய் சரவணன் தயாரிப்பில், சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘கென்னடி கிளப்’. பெண்கள் கபடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சசிகுமார் மற்றும் இயக்குநர் பாரதிராஜா முக்கிய வேடங்களில் நடிக்க, நிஜ கபடி வீராங்கனைகள் பலர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் நடைபெற்றது. அதேபோல், தமிழகத்தின் பல பகுதிகளிலும் நடைபெற்றது.
இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விழுப்புரத்தில் பிரம்மாண்டமான தளம் அமைத்து நடத்தப்பட்டது. இதில், நிஜ கபடி வீராங்கனைகளும் நடித்தார்கள்.
இந்த நிலையில், இயக்குநர் பாரதிராஜாவின் பகுதில் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், நேற்று முன் தினம் அவர் தனது இல்லத்தில், படத்தில் நடித்த நிஜ கபடி வீராங்கனைகள், இயக்குநர், உதவி இயக்குநர்கள் மற்றும் படத்தில் பணியாற்றியவர்களுக்க் விருந்து அளித்து உபசரித்தார்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...