கணவன் மனைவியான பிரபல ஹாலிவுட் நடிகர் பிராட் பிட் - நடிகை ஏஞ்சலினா ஜூலி, கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஆண்டு பிரிந்த நிலையில், தற்போது அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
பிராட் பிட்டின் குடி மற்றும் போதை பழக்கம் அதனால் ஏற்படும் பிரச்சினைகளினால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. எனவே அவரை நான் குழந்தைகளின் நலன் கருதி பிரிகிறேன், என்று நடிகை ஏஞ்சலினா ஜூலி கூறி அவரை பிரிந்தார்.
மேலும், இருவரும் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இன்னும் தீர்ப்பு வழங்கப்படாத நிலையில், இருவரையும் சமர்சப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதுடன், இருவருக்கும் நீதிமன்றம் சார்பில் ஆலோசனை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில், பிராட் பிட் மற்றும் ஏஞ்சலினா ஜோடி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் சந்திப்பின் போது இருவருக்கும் இடையே மோதல் ஏதும் ஏற்பட்டுவிடாமல் இருக்க நடுவர் ஒருவரும் அந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார். ஆனால், யாரும் எதிர்ப்பார்க்காத அளவுக்கு, சந்தித்த இருவரும் கட்டு தழுவிக் கொண்டு கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
தற்போது இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ நினைப்பதுடன், ஒருவருக்கொருவர் எந்த அளவுக்கு முக்கியம் என்பதை நன்கு உணர்ந்த பிறகே இந்த முடிவுக்கு வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
எஸ்பிஏ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் உருவாகி இருக்கும் படம் ’மகேஸ்வரன் மகிமை’...
நடிகர் விஜய் நடித்து மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான இயக்குநர் எழில், திரையுலகில் தனது 25 வருடத்தில் அடியெடுத்து வைத்துள்ளார்...
பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகும் பெரும் எதிர்பார்ப்புக்குரிய வரலாற்றுப் படைப்பான ‘ஹரி ஹர வீரமல்லு’ திரைப்படத்தில் முகலாய சக்கரவர்த்தி ஔவரங்கசீப்பாக பாபி டேயோல் நடிக்கிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றே...