இசையமைப்பாளராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்த விஜய் ஆண்டனி, ஹிரோவாகவும் தனது வெற்றிப் பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். அவர் நடித்த ‘பிச்சைக்காரன்’ தமிழில் மட்டும் இன்றில் ஆந்திராவிலும் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால், தற்போது விஜய் ஆண்டனியின் அனைத்து படங்களும் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
விஜய் ஆண்டனியின் அடுத்த வெளியீடான ‘அண்ணாதுரை’ படத்திற்கு அவர் இசையமைப்பதோடு, எடிட்டிங் பணியையும் அவரே மேற்கொண்டுள்ளாராம். அவரது எடிட்டிங் பணி மக்களிடம் வரவேற்பு பெற்றால், இனி தான் நடிக்கும் அனைத்து படங்களிலும் எடிட்டர் பொறுப்பையும் அவரே ஏற்க முடிவு செய்துள்ளாராம்.
ஆக மொத்தத்தில், இசையமைப்பாளர் மற்றும் ஹீரோவாக இருந்த விஜய் ஆண்டனி, இனி எடிட்டராகவும் தனது பயணத்தை தொடங்க உள்ளார்.
இந்திய திரைப்படத் துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் புரட்சிகரமான புதிய தளம் ‘இந்தியன் பிலிம் மார்க்கெட்’ (INDIAN FILM MARKET)...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன்...
உளவியல் த்ரில்லர் கதையான ‘ஸ்டீபன்’ இணையத் தொடர் நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான ஒரு வாரத்திற்குள்ளேயே உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது...