திரைப்பட நடிகர், நடிகைகள் பேர், புகழ், செல்வம் என்று சந்தோஷமான வாழ்க்கையை அனுபவித்து வருகிறார்கள், என்று தான் ரசிகர்களும், பொது மக்களும் அறிவார்கள். ஆனால், அவர்கள் அறியாத பல துயரங்களை பல சினிமா பிரபலங்கள் அனுபவித்து வருகிறார்கள். இதில், சிலரது துயரங்கள் வெளியுலகிற்கு தெரிந்தாலும், பலரது சோகக் கதைகள் தெரியாமலேயே போய்விடுகிறது.
அந்த வகையில், பிரபல நடிகையான சோனாலி பிந்த்ரே, தான் அனுபவித்த துயரங்களை பகிர்ந்துக் கொண்டிருப்பது ஒட்டு மொத்த இந்திய திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
’காதலர் தினம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமான சோனாலி பிந்த்ரே, பல இந்தி திரைப்படங்களில் நடித்திருப்பதோடு, சர்வதேச மாடலாகவும் வலம் வந்திருக்கிறார். பிறகு திருமணம் செய்துக் கொண்டு குழந்தைகள், குடும்பம் என்று இல்லத்தரசியாக வாழ்ந்து வந்தார்.
இதற்கிடையே, புற்றுநோயால் சோனாலி பிந்த்ரே பாதிக்கப்பட்டது பலருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து மீண்டும் இந்தியா திரும்பியுள்ள சோனாலி பிந்த்ரே, தனது அனுபவங்களை சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.
அதில், புற்றுநோயை மறைக்க விரும்பாமல் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டேன். ஆரோக்கியத்தை உருவாக்கும் எத்தனையோ பொருட்களுக்கு தூதுவராக இருந்த எனக்கு புற்றுநோய் என்றதும் வாழ்க்கை தலைகீழாக ஆனது. எல்லோரும் தைரியம் கொடுத்தனர். இதனால் நோயை எதிர்கொள்ள நம்பிக்கை வந்தது.
அறுவை சிகிச்சைக்கு பிறகும் கஷ்டப்பட்டேன். எனது உடலில் 20 இடங்களில் ஆபரேஷன் செய்திருக்கிறார்கள். அதற்கான வடுக்கள் இருக்கிறது. நான் மறுபடியும் செய்ய வேண்டிய வேலை இருப்பதால் கடவுள் காப்பாற்றி அனுப்பி இருக்கிறார் என்று தோன்றுகிறது. இல்லாவிட்டால் உயிர் போகிற அளவுக்கு போய் திரும்ப வந்து இருக்க மாட்டேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும், எத்தனையோ எண்ணெய் மற்றும் ஷாம்பூ விளம்பரத்தில் நடித்த நான், தற்போது என் தலை முடியை முழுவதுமாக இழந்துவிட்டேன், என்றும் சோனாலி தனது வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...