தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் நம்பர் ஒன் நடிகையாக இருக்கும் நயன்தாரா, தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருவதோடு, ஹீரோக்களுக்கு நிகரான ஓபனிங் கொண்ட நடிகை என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார். அவரது நடிப்பில் வெளியான ஹீரோயின் சப்ஜக்ட் படங்கள் மிகப்பெரிய வெற்றிப் பெற்றதால், முன்னணி ஹீரோக்களின் படங்கள் வெளியாகும் போது, போடப்படும் அதிகாலை காட்சி உள்ளிட்ட அத்தனையும் நயன்தாராவின் புது பட ரிலிஸின் போதும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இதனால், நயன்தாரா கேட்கும் பெரும் தொகையை சம்பளமாக கொடுக்க தயாரிப்பாளர்கள் பல முன் வருவதால், நயன்தாராவின் மார்க்கெட்டில் அடை மழை தான்.
இந்த நிலையில், ஹீரோயின் சப்ஜக்ட் மற்றும் முன்னணி ஹீரோக்களின் படங்களில் ஜோடியாக நடித்தாலும், தனது கதாபாத்திரத்திற்கு முக்கிய பங்கு இருப்பது போல பார்த்துக் கொள்ளும் நயன்தாரா, தற்போது புதிய திட்டம் ஒன்றை வகுத்திருக்கிறாராம்.
அதாவது, ஹாலிவுட் படங்களான வொண்டர் வுமன், கேப்டன் மார்வல் போன்ற சூப்பர் ஹீரோயின்கள் சப்ஜட் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். நயந்தாராவின் இந்த புதிய திட்டத்திற்கு, அவரது தயாரிப்பு நிறுவனம் என்று கூறப்படும் கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் பல கோடிகளை முதலீடு செய்ய தயராகி வருகிறதாம்.
அப்படி, நயன்தாரா நடிப்பில் சூப்பர் உமன் படம் வெளியானது என்றால், இந்திய சினிமாவில் சூப்பர் ஹீரோப் படங்களை தாண்டி சூப்பர் ஹீரோயின் என்ற பெருமையை நயன்தாரா பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...