சினிமா பிரபலங்கள் சிலர் செய்யும் விளையாட்டான விஷயங்கள் பெரும் விபரீதங்களை ஏற்படுத்தி விடுகிறது. அப்படி ஒரு பிரபல இயக்குநர் செய்த சில்மிஷத்தால், பிரபல நடிகை விவாகரத்து முடிவு எடுக்க, அவரது குடும்பத்தார் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான ஷில்பா ஷெட்டி தொழிலதிபர் ராஜ் குந்த்ராவை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் ஒரு மகன் இருக்கிறார்.
இந்த நிலையில், ஷில்பா ஷெட்டி தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக தகவல் பரவி வருகிறது. இது குறித்து அறிந்த ஷில்பாவின் குடும்பத்தார் பெரும் அதிர்ச்சியடைந்ததோடு, அவரது ரசிகர்களும் அதிர்ச்சியாகியுள்ளனர்.
ஆனால், இது உண்மையில்லை என்றும், பிரபல இயக்குநரான அனுராக் பாசு செய்த பிரான்க் சில்மிஷம் தான் இதற்கு காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.
சூப்பர் டான்ஸர் என்ற ரியாலிட்டி ஷோவில் ஷில்பா ஷெட்டியும், இயக்குநர் அனுராக் பாசுவும் நடுவர்களாக இருக்கிறார்கள். அந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங்கின் போது ஷில்பா ஷெட்டிக்கு தெரியாமல் அவரது போனை எடுத்த அனுராக் பாசு அவரது அம்மாவுக்கு ஒரு sms அனுப்பியுள்ளார். 'கணவருடன் பெரிய சண்டை போட்டு விட்டேன். விவாகரத்து செய்கிறேன்' என அதில் குறிப்பிட்டுள்ளார்.
அதை பார்த்த ஷில்பாவின் அம்மா பதறிப்போய், உடனே அவருக்கு போன் செய்து பேச, எதுவும் புரியாமல் இருந்த நடிகை ஷில்பா ஷெட்டிக்கு பிறகு தான் தெரிய வந்திருக்கிறது, அது அனுராக் செய்த பிரான்க் என்று. பிறகு குடும்பத்தாரிடம் பேசி புரிய வைத்த ஷில்பா ஷெட்டி, இது தொடர்பாக விளக்கமும் அளித்திருக்கிறார்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...