சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘நிமிர்ந்து நில்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ராகினி திவேதி. இப்படத்தை தொடர்ந்து ‘அரியான்’ என்ற தமிழ்ப் படத்திலும் நடித்த ராகினி, தற்போது ஜெயலலிதா வாழ்க்கைப் படமாக உருவாகும் ‘அம்மா’ படத்திலும் நடித்து வருகிறார்.
கன்னட சினிமாவை சேர்ந்த இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகை ராகினி திவேதியுடன் ஆர்.டி.ஓ அதிகாரி ஒருவர் நட்சத்திர ஓட்டல் இன்றில் இரவு விருந்தில் கலந்துக் கொண்ட போது ராகினியின் ஆண் நண்பர் மூலம் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராகினி திவேதி, தனது நண்பரான ஆர்.டி.ஓ அதிகாரி ரவிசங்கர் என்பவருடன் பெங்களூர் ரெசிடென்சி சாலையில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். இரவு 11.45 மணி அளவில் ராகினியின் மற்றொரு நண்பரான சிவபிரகாஷ் என்பவர் அதே ஓட்டலுக்கு வந்தார்.
ஓட்டலில் ராகினியுடன் ரவிசங்கரை பார்த்த சிவபிரகாஷ், கோபம் அடைந்ததோடு, ராகினியுடன் வாக்குவதத்தில் ஈடுபட்டவர், பீர் பாட்டிலை எடுத்து ரவியின் தலையில் உடைத்தார். இதில் காயம் அடைந்த ரவி, ரத்தம் சொட்ட சொட்ட, அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
சிகிச்சைக்குப் பிறகு காவல் நிலையம் சென்று சிவபிரகாஷ் மீது ரவிசங்கர் புகார் அளித்தார். இதையடுத்து, சிவபிரகாஷ் மீது மூன்று பிரிவுகளில் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...