சென்னையை சேர்ந்த பிரபல மாடல் அழகியான பிரதைனி சர்வா, நீண்ட நாட்களாக பல சினிமா வாய்ப்புகளை நிரகாரித்து வந்த நிலையில், தற்போது திரில்லர் படம் ஒன்றின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
பல்வேறு விளம்பரப் படங்களில் நடித்திருப்பதோடு, இந்திய அளவில் முன்னணி மாடல்களில் ஒருவராக வலம் வந்தவர் பிரதைனி சர்வா. இவர் இல்லாத மாடலிங் ஷோக்களே இல்லை, என்று சொல்லும் அளவுக்கு அனைத்து பேஷன் ஷோக்களிலும் இவர் நிச்சயம் இருப்பார். கவர்ச்சியும், அழகும் ஒருங்கே பெற்ற பிரதைனியை நடிக்க வைக்க பலர் முயற்சித்தாலும், சரியான வாய்ப்புகள் அமையாததால் திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்த பிரதைனிக்கு, அறிமுக இயக்குநர் கே.ஆர்.சந்த்ரு, இயக்கத்தில் உருவாகும்’போதை ஏறி புத்தி மாறி’ படத்தின் கதை பிடித்திருந்ததால் நடிக்க சம்மதம் தெரிவித்திருக்கிறார்.
ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இப்படத்திற்கு கேபி இசையமைக்க, பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்கிறார். கோபி ஆனந்த் கலையை நிர்மாணிக்க, சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்கிறார்.
திரில்லர் படமாக உருவாகும் ‘போதை ஏறி புத்தி மாறி’ படத்தில் பிரதைனிக்கு ஜோடியாக, தீரஜ் என்பவர் நடிக்கிறார்.
சினிமாவில் சில பெண் கதாபாத்திரங்களை தொடர்ந்து கவனித்து வருவதோடு, அவை பார்வையாளர்களை ஊக்குவிப்பதோடு, உற்சாகப்படுத்துவதாகவும் அமைகிறது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களுக்காக தான் காத்திருந்ததாக, கூறிய பிரதைனி, இயக்குநர் சந்துருவின் ஹீரோயின் கதாபாத்திரம் அப்படிப்பட்ட கதாபாத்திரமாக இருந்ததால் தான் நடிக்க சம்மதம் தெரிவித்தேன், என்றார்.
மேலும், நடிகைகள் வெறுமனே பார்பி பொம்மைகளாகவும், கவர்ச்சி சின்னங்களாகவும் சித்தரிக்கப்படக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கும் நான், இப்படத்தில் நான் நடிக்க இருக்கும் பிருந்தா கதாபாத்திரம் எனக்கு பிடித்தது, என் கதாபாத்திரம் மட்டும் இன்றி இயக்குநர் சந்துருவின் கதையும் மனதுக்கு பிடித்ததால், நடிக்க சம்மதித்தேன், என்றார்.
விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள ‘கிங்டம்’ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது...
சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் வழங்கும் இயக்குநர் ராஜவேல் இயக்கத்தில் நடிகர்கள் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ உள்ளிட்டப் பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'ஹவுஸ் மேட்ஸ்'...
18 கிரியேட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சசிகலா பிரபாகரன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பாலாஜி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் சரவணன் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்க, நீதிமன்ற வழக்கின் பின்னணியில், அசத்தலான இணையத் தொடராக ZEE5-ல் 2025 ஜூலை 18 ஆம் தேதி வெளியான ‘சட்டமும் நீதியும்’ தொடர், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்துள்ளது...