‘எமன்’ படத்திற்குப் பிறகு ‘காளி’, ‘அண்ணாதுரை’ உள்ளிட்ட பல படங்களில் விஜய் ஆண்டனி நடித்து வருகிறார்.
விஜய் ஆண்டனி கார்ப்பரேஷன் மற்றும் நடிகை ராதிகா இணைந்து தயாரிக்கும் ‘அண்ணாதுரை’ படத்தை ஜி.சீனிவாசன் என்ற அறிமுக இயக்குநர் இயக்க, ‘காளி’ படத்தை நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதி இயக்குகிறார்.
விஜய் ஆண்டனியின் சொந்த நிறுவனமான விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் இன்று வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
ரஜினிகாந்த் பட தலைப்பான ‘காளி’ யை ஏற்கனவே ஒரு படத்திற்கு வைக்கப்பட்டு பிறகு செண்டிமெண்ட் காரணமாக மாற்றப்பட்ட நிலையில், விஜய் ஆண்டனி அந்த தலைப்பை தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து தனது படங்களுக்கு வித்தியாசமான தலைப்புகளை வைத்து வரும் விஜய் ஆண்டனி, எந்தவித செண்டிமெண்டான விஷயங்களுக்கும் இடம் கொடுக்காமல் ‘காளி’ தலைப்பை தேர்வு செய்துள்ளார்.
தமிழக அரசு மற்றும் NFDC ஆதரவுடன் இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் (ICAF) நடத்தும் 23-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா தொடங்கியது...
திரைப்பட தயாரிப்பாளரும், விஜயின் முன்னாள் மேலாளர் மற்றும் ‘கலப்பை மக்கள் இயக்கம்’ நிறுவனர் பி...
சமீபத்திய மழையில் நனைந்த நடை பாதை வியபாரிகளுக்கும், ஏழை எளியவர்களுக்கும், பல உதவிகள் செய்த, கலப்பை மக்கள் இயக்க தலைவர் டாக்டர் பி...