’மெர்சல்’, ‘சர்கார்’ என்று விஜய் படங்கள் தொடர்ந்து அரசியல் பேசுவதால், அவரது படங்களின் மீதான எதிர்ப்பார்ப்பு தமிழகத்தை கடந்து பிற மாநிலங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 63 வது படத்திற்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வட சென்னை பகுதியில் நடைபெற்று வருகிறது. விஜய், நயந்தாரா பங்குபெறும் காட்சிகள் வட சென்னையில் நேற்று இரவு படமாக்கப்பட்டுக் கொண்டிருந்த போது நள்ளிரவில் பெரும் கூட்டம் விஜயை பார்க்க முயன்றதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு போலீஸ் தலையிட்டு கூட்டத்தை கட்டுப்படுத்தியதால் மீண்டும் சகஜ நிலை திரும்பியது.
இந்த நிலையில், ‘தளபதி 63’ படத்தின் சாட்டிலைர் உரிமையை சன் தொலைக்காட்சி பெற்றிருக்கிறது. இது குறித்து அந்நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...