தேர்தல் நேரங்களில் நடத்தப்படும் கருத்து கணிப்பு போல, சில இணையதள ஊடகங்களும், சமூக வலைதளவாசிகளும் அவ்வபோது சினிமா தொடர்பான கருத்து கணிப்புகளை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில், மிக மோசமான நடிகர்கள் யார்? என்ற தலைப்பில் இணையதள ஊடகம் ஒன்று கருத்து கணிப்பு நடத்தியதாக பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலில் தமிழ் சினிமாவின் உச்ச நடிகரான விஜய் பெயர் இடம்பிடித்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.
தனது திறமையின் மூலம் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட விஜய், ரசிகர் மன்றங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, தனது படங்கள் மூலம் அரசியல் தொடர்பாக பேசி விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறார். அதே சமயம், ரசிகர்களை பொழுதுபோக்குவது போன்ற வகையிலும் படங்கள் கொடுத்து வருகிறார்.
விஜய் படங்கள் என்றாலே ரசிகர்கள் எப்படி கொண்டாடுகிறார்களோ, அதுபோல் திரையரங்க உரிமையாளர்கள், விநியோகஸ்தர்கள் என சினிமாத் துறையினரும் கொண்டாடுகிறார்கள்.
இந்த நிலையில், மிக மோசமான நடிகர் பட்டியலில் விஜய் பெயரை சேர்த்திருப்பது, ரசிகர்களுக்கு மட்டும் இன்றி சினிமாத் துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பட்டியலில் இருக்கும் மற்ற நடிகர்கள் பெயர் இதோ,
சாந்தனு
ஆதி
சிம்பு
ஜெயம் ரவி
விஷால்
விஜய்
இந்த பட்டியல் திட்டமிட்டு உருவாக்கப்பட்டதாக குற்றம் சாட்டும் விஜய் ரசிகர்கள், விஜயின் பெயரை கெடுப்பதற்காக சிலர் செய்யும் சதி வேலைகளில் இதுவும் ஒன்று, என்றும் தெரிவித்துள்ளனர்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...