’மரகத நாணயம்’ வெற்றிப் படத்தை தொடர்ந்து மீண்டும் ஒரு காமெடி படத்தில் ஆதி நடிக்கிறார். இதில் அவருடன் ஹன்சிகாவும் மிக முக்கியமான வேடத்தில் நடிக்கிறார். ‘பார்ட்னர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஆதிக்கு ஜோடியாக பாலக் லால்வாணி நடிக்கிறார். இவர்களுடன் பாண்டியராஜன், யோகி பாபு, ரோபோ சங்கர், வி.டி.வி.கணேஷ், ஜான் விஜய், ரவி மரியா, டைகர் தங்கதுரை ஆகியோர் நடிக்கின்றனர்.
ஆர்.எப்.சி கிரியேஷன்ஸ் சார்பில் எஸ்.பி.கோலி தயாரிக்கும் இப்படத்தை மனோஜ் தாமோதரன் என்ற அறிமுக இயக்குநர் இயக்குகிறார். இவர் இயக்குநர் சற்குணத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியிருப்பதோடு, நயன்தாரவின் ‘டோரா’ படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியிருக்கிறார்.
சபீர் அஹமது ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார். கோபி எடிட்டிங் செய்ய, சசி கலையை நிர்மாணிக்கிறார். மக்கள் தொடர்பு பணியை யுவராஜ் கவனிக்கிறார்.
முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சயின்ஸ் பிக்ஷன் கலந்த ஒரு பேண்டசி விஷத்தையும் சொல்கிறார்களாம். அது ரசிகர்களை வெகுவாக கவருவதோடு, படத்தின் மிக முக்கிய அம்சமாக ஹன்சிகாவின் கதாபாத்திரம் அமைந்திருப்பதோடு, நடிகர் ஆதிக்கு இப்படம் அவரது சினிமா கரியரின் முக்கிய படமாகவும் இருக்குமாம்.
எனர்ஜிக் மற்றும் எண்டெர்டெயின்மெண்ட் படமாக உருவாக உள்ள ‘பார்ட்னர்’ படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...