Latest News :

நண்பர்கள் அட்வைஸ் - அஜித்திடம் இருந்து எஸ்கேப்பாகும் சிவா!
Tuesday September-05 2017

‘வீரம்’, ‘வேதாளம்’, ‘விவேகம்’ என்று தொடர்ந்து மூன்று படங்கள் அஜித்தை வைத்து இயக்கிய சிவா,  பரவாயில்லை, சுமார், படு மோசம் என்று மூன்று விதமான தோல்விகளை சந்தித்ததுடன், ‘விவேகம்’ படத்தின் விமர்சனத்தால் வெளியில் தலை காட்ட முடியாதவராகிவிட்டார். இருந்தாலும், சிவாவை அழைத்து ஆறுதல் கூறிய அஜித், கவலைப்படாதிங்க பாத்துக்கலாம், என்று கூறியிருக்கிறார்.

 

அஜித்தின் இந்த ஆறுதலோடு, அடுத்த படத்தின் வாய்ப்பும் சிவாவுக்கே என்று கோலிவுட்டில் தகவல் கசிந்துள்ள நிலையில், அஜித்திடம் இருந்து சிவா எஸ்கேப்பாகும் முடிவுக்கு வந்துவிட்டாராம். இதற்கு காரணம் அவரது நல விரும்பி நண்பர்களின் அட்வைஸ் தானாம்.

 

குறிப்பாக பெரிய ஹீரோவை வைத்து படம் எடுத்து பெரிய அளவில் நஷ்ட்டம் அடைந்ததோடு, அவமானமும் பட்ட சில இயக்குநர்கள், சிவாவை தொடர்புக்கொண்டு, அஜித் உங்களுக்கு அடுத்த படம் கொடுப்பதாக சொல்லியிருக்கலாம். ஏன், அது உண்மையாக கூட இருக்கலாம். ஆனால், அதை நம்பி காத்திருந்து ஏமாற வேண்டாம், சட்டென்று சின்ன ஹீரோ யாரையாவது வைத்து ஒரு படத்தை கொடுங்க, அது தான் நம்மை மீண்டும் நிரூபிப்பதற்கான கருவியாக இருக்கும். அதைவிட்டுட்டு வருட கணக்கில் காத்திருந்து கிடப்பில் போட்ட அரசு திட்டம் போல ஆகிவிடாதிங்க, என்று அட்வைஸ் பண்ணியிருக்காங்களாம்.

 

அனுபவத்துடன் அடியும் பட்ட அந்த இயக்குநர்களின் அட்வைஸை ஏற்றுக்கொண்ட இயக்குநர் சிவா, தற்போது அஜித்திடம் இருந்து எஸ்கேப்பாகி தனது அடுத்த கதையை சின்ன ஹீரோ யாரிடமாவது கொடுக்க முடிவு செய்துவிட்டாராம்.

Related News

442

'TN 2026' படம் யாரையும் புண்படுத்தாது! - தம்பி ராமையா விளக்கம்
Saturday April-04 2026

‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து கே...

எங்கள் படம் பிரிந்தவர்களை சேர்த்து வைக்கும்! - ’பிரேக் ஃபாஸ்ட்’ (Break Fast) படக்குழு நம்பிக்கை
Saturday April-04 2026

’செல்லமே’, ‘ஆனந்த தாண்டவம்’ ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய ஏ...

’மனிதன் தெய்வமாகலாம்’ படத்தின் இயக்குநரை பாராட்டிய செல்வராகவன்!
Friday April-03 2026

வி.ஒய்.ஓ.எம் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் சதீஷ் மற்றும் விஜயா சதீஷ் தயாரிப்பில், டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘மனிதன் தெய்வமாகலாம்’...

Recent Gallery