கவுண்டமணி - செந்தில் கூட்டணி தமிழ் சினிமாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த காலக்கட்டத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த வடிவேலு, தனதி தனிப்பட்ட உடல் மொழி மற்றும் டயலாக் டெலிவரியால் தனி ஆளாக தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ராஜ்ஜியம் நடத்தி வந்தார்.
வடிவேலு திரையில் தோன்றினாலே சிரிக்கும் அளவுக்கு ரசிகர்களை தனது காமெடி மூலம் கட்டிப்போட்ட வடிவேலு, ஹீரோவாக நடித்த ‘இம்சை அரசன் 23ம் புலிகேசி’ மிகப்பெரிய வெற்றி பெற்றதோடு, வசூலில் சாதனையும் புரிந்தது. இதை தொடர்ந்து வடிவேலு ஹீரோவாக நடித்த சில படங்கள் தோல்வி அடைந்த நிலையில், அரசியலில் தலையிட்டால் சினிமாவில் இருந்து மூன்று ஆண்டுகள் ஒதுங்கி இருந்தவர். மீண்டும் ஹீரோவாக களம் இறங்க, அப்படங்களும் தோல்வியடைந்ததால், மீண்டும் காமெடி வேடங்களில் நடிக்க தொடங்கியுள்ளார்.
இதற்கிடையே, வடிவேலுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க விரும்பும் தயாரிப்பாளர்கள் அவர் கேட்கும் சம்பளத்தால் திரும்ப வந்துவிடுகிறார்கள். காமெடியனாக நடித்த போது நாள் சம்பளம் பெற்ற வடிவேலு, ஹீரோவாக நடிப்பதற்கும் அதே முறையிலேயே சம்பளம் கேட்கிறாராம். அதாவது ஒரு படத்திற்கு அவரது தற்போதைய சம்பளம் ரூ.4 கோடி என்று கூறப்படுகிறது. படத்தின் மற்ற செலவுகள் என்று அனைத்தையும் சேர்த்தால் வடிவேலுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க சுமார் ரூ.20 கோடி செலவிட வேண்டும். ஆனால், அதற்கான வியாபாரமும், வசூலும் வடிவேலு படத்திற்கு இருக்காது என்பதால், அவரை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க விரும்பியவர்கள், சம்பளத்தை பாதியாக குறைத்தால் படம் தயாரிக்க ரெடி, என்று கூறுகிறார்கள்.
தயாரிப்பாளர்களின் கோரிக்கையை ஏற்க மறுக்கும் வடிவேலு, ”நானா உங்கள என்னை வைத்து படம் தயாரிக்க சொன்னேன்” என்று கரார் காட்டுகிறார்களாம். இதனால், வடிவேலுவை வைத்து படம் தயாரிக்க விரும்பிய தயாரிப்பாளர்களின் கவனம் யோகி பாபு மீது திரும்பியுள்ளது.
வடிவேலுவை போல தனி ஆளாக தனது நக்கல் வசனங்கள் மூலம் ரசிகர்களை சிரிக்க வைக்கும் யோகி பாபு, தான் தற்போதைய தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் காமெடி நடிகர். விஜய், அஜித், நயந்தாரா என முன்னணி நடிகர்கள் பலரும் தங்களது படங்களில் யோகி பாபுவை நடிக்க வைக்க விரும்புவதால், மக்களிடமும், திரையுலகினரிடமும் யோகி பாபுவின் மவுசு அதிகரித்து வருகிறது.

மேலும், யோகி பாபு ஹீரோவாக அறிமுகமாக உள்ள ‘தர்ம பிரபு’ படத்தை வாங்க விநியோகஸ்தர்களிடையே கடும் போட்டி நிலவுவதால், யோகி பாபுவை ஹீரோவாக வைத்து படம் தயாரிக்க பல தயாரிப்பாளர்கள் முன்வந்திருப்பதோடு, இது தொடர்பாக அவரிடம் பேச்சு வார்த்தை நடத்த அவர் அலுவலகம் நோக்கி படையெடுத்து வர, யோகி பாபுவின் ஏரியா எப்போதும் டிராபிக் ஜாமாகாவே இருக்கிறதாம்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...