மற்ற இரட்டை வேடம் படங்களுக்கு இல்லாத சிறப்பு கொண்ட நயன்தாராவின் ‘ஐரா’!
Thursday March-21 2019

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவின் படங்கள் முன்னணி ஹீரோக்களுக்கு சமமாக பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்வதால், அவரது ஒவ்வொரு படமும் மிகப்பெரிய அளவில் வெளியாகிறது. அந்த வகையில், வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஐரா’ படமும் பெரிய அளவில் ரிலீஸாகிறது.

 

கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரித்திருக்கும் இப்படத்தை சர்ஜூன் கே.எம். இயக்கியிருக்கிறார். நயன்தாரா, முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் கலையரசன், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.

 

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் கலையரசன், இயக்குநர் சர்ஜூன், இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் கலந்துக் கொண்டார்கள்.

 

நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் சர்ஜூன், “நிறைய பேருக்கு நிறைய கேள்விகள் இருந்தன. மேகதூதம் பாடல் அதற்கு பதிலாக இருந்திருக்கும் என நம்புகிறேன். நான் மிகவும் ரசித்து எடுத்த படம், அதுவும் கருப்பு வெள்ளையில் படம் பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. கேஜேஆர் ராஜேஷ் சார் எனக்கு முழு சுதந்திரம் கொடுத்தார். நான் கேட்டதையெல்லாம் கொடுத்தார். கதை கேட்ட பிறகு எந்த விஷயத்திலும் எந்த ஒரு குறுக்கீடும் இல்லை. ஏன் இந்த செலவு, எப்படி படத்தை எடுக்கிறீங்க என எதையும் அவர் கேட்கவில்லை. படம் முடிந்த பிறகு படத்தின் ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தார். மிகவும் மகிழ்ச்சி என சொன்னார். படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க ப்ரமோஷனில் பட்டையை கிளப்புகிறார். மிகச்சிறப்பாக விளம்பரப்படுத்தி வருகிறார். நயன்தாரா இரண்டு கதாபாத்திரங்களையும் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார். மற்ற படங்களில் இரட்டை வேடம் என்றால் அதில் இரண்டுக்கும் ஒரு தொடர்பு இருக்கும். இங்கு இரண்டு கதாபாத்திரங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நயன்தாரா இந்த படத்துக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். இது வெறும் ஹாரர் படம் மட்டும் கிடையாது. இன்னொரு சீரியஸான, எமோஷனல் கோணமும் இருக்கிறது. அதையும் தாண்டி ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கும்.” என்றார்.

 

Airaa Press Meet

 

நடிகர் கலையரசன் பேசுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம். இது என் கேரியரில் மிகவும் முக்கியமான ஒரு படமாக இருக்கும். சமீப காலங்களில் நான் கடந்து வரும் மிக முக்கியமான கேள்வி மெட்ராஸ் மாதிரி ஏன் படங்கள் பண்றதில்லை என்பது தான். நானும் நிறைய கதைகள் கேட்கிறேன். இந்த படம் பெயர் சொல்லும் ஒரு படமாக இருக்கும். இயக்குனர் சர்ஜூன் உடன் எச்சரிக்கை படத்தில் நடிக்க வேண்டியது, ஆனால் அது அமையவில்லை. இந்த படத்தில் சர்ஜூன் கேட்டபோது உடனடியாக ஒப்புக் கொண்டேன். இதில் ஹாரர் விஷயத்தையும் தாண்டி மிகச்சிறப்பான கதை இருக்கிறது. சர்ஜூன் கதை எல்லாம் சொல்லி முடித்த பிறகு தான் அந்த பவானி கதாபாத்திரத்திலும் நயன்தாரா தான் நடிக்கிறாங்க என சொன்னார். அது பெரிய சர்ப்ரைஸாக இருந்தது. அந்த கதாபாத்திரத்துக்காக அவர் ரொம்பவே மெனக்கெட்டார். நல்ல ஒரு பொழுதுபோக்கு படமாக வந்திருக்கிறது.” என்றார்.

 

இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி பேசுகையில், “இது மிகவும் மகிழ்ச்சியான தருணம், எனக்கு இந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் சர்ஜுன், தயாரிப்பாளர் ராஜேஷ் ஆகியோருக்கு நன்றி.” என்றார்.

 

மார்ச் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் ‘ஐரா’ படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் வெளியிடுகிறார்.

Related News

4421

’தாய் கிழவி’ மூலம் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன் - சிவகார்த்திகேயன்
Wednesday March-11 2026

பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...

உண்மை சம்பவத்தை இரத்தமும் சதையுமாக சொல்லும் ‘மனிதன் தெய்வமாகலாம்’!
Tuesday March-10 2026

வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...

நயன்தாராவை கெளரவித்த ‘பேட்ரியாட்’ படக்குழு!
Tuesday March-10 2026

மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில்  நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...

Recent Gallery