விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்கும் ‘தமிழரசன்’ படத்தில் ரம்யா நம்பீசன் ஹீரோயினாக நடிக்கிறார். பாபு யோகேஸ்வரன் இயக்கும் இப்படத்தின் முக்கியமான வேடம் ஒன்றில் சங்கீதா நடிக்கிறார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சங்கீதா நடிக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் சுரேஷ் கோபி, சோனு சூட், ராதாரவி, யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார். கெளசல்யா ராணி தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், தமிழரசன் படத்தின் நாயகி ரம்யா நம்பீசன், படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு படக்குழுவினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...