Latest News :

பொள்ளாச்சி சம்பவத்தை பிரதிபலிக்கும் திரைப்படம்! - விரைவில் வெளியாகிறது
Thursday March-21 2019

எம் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘கருத்துக்களை பதிவு செய்’. இதில் பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ஆரின் பேரன் எஸ்.எஸ்.ஆர்.ஆரியன் ஹீரோவாக அறிமுகமாகிறார். ஹீரோயினாக உபாஷ்ணா ராய் நடிக்கிறார். இவர்களுடன் பல புதுமுக நடிகர், நடிகைகள் நடிக்கிறார்கள்.

 

கணேஷ் ராகவேந்திரா இசையமைக்கும் இப்படத்திற்கு மனோகர் ஒளிப்பதிவு செய்கிறார். சொற்கோ பாடல்கள் எழுத, மனோ கலையை நிர்மாணிக்கிறார். மாருதி எடிட்டிங் செய்கிறார். எஸ்.எல்.பாலாஜி நடனம் அமைக்க, டி.பி. வெங்கடேசன் தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்கிறார். ராஜசேகர் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுத, இணை தயாரிப்பை ஜே.எஸ்.கே.கோபி ஏற்றிருக்கிறார். ராகுல் இயக்குகிறார். இவர் ஏற்கனவே ஜித்தன் 2, 1 AM ஆகிய இரண்டு  படங்களை இயக்கியுள்ளார்.

 

ஹாரர் படமாக உருவாகும் ‘கருத்துக்களை பதிவு செய்’ படம் பற்றி இயக்குநர் ராகுல் கூறுகையில், ஹாரர் டைப் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்களிடம் வரவேற்பு உண்டு என்பதை நம்புகிறவன் நான்.

 

படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு முடிவடைந்தது...சமூக வலை தல மான பேஸ்புக் பற்றியது தான் இந்த படம். பேஸ்புக்கில் அறிமுகமாகி நண்பர்களாக பழகி ,காதலர்களாகி பின் அவனிடம் தன் கற்பை இழந்த பெண். அதோடு அந்த பெண்ணை ஒரு அறையில் பூட்டி வைத்து சித்திரவதை செய்யும் கொடூரமானவனிடமிருந்து தப்பி வந்த பெண் என்ன முடிவெடுக்கிறார், என்ன மாதிரியான தண்டனையை அவனுக்கு  கொடுத்தாள் என்பது தான் கதை.

 

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்கள் பலவற்றை என் "கருத்துக்களை பதிவு செய்" படத்தில் நான் ஏற்கெனவே பதிவு செய்திருக்கிறேன். படத்தின் இறுதி கட்ட பணிகள் முடிவடையும் கட்டத்தில் இருக்கும்  சூழலில் பொள்ளாச்சி சம்பவம் பெரிதாக வெடித்திருக்கிறது...நானும் நிஜ சம்பவங்களின் பிரதிபலிப்பு தான் என்பதை அப்போதே பதிவு செய்திருந்தேன். பெத்தவங்க பிள்ளைகளுக்கு போனை வாங்கிக் கொடுப்பதாக நினைக்கிறாங்க...இல்லவே இல்லை,

"பிசாசத்தான் வாங்கி கொடுக்கிறாங்க.

 

இன்றைய பேஸ்புக், இணையதளம், மற்றும் சமூக வலைதள காதல்கள் எல்லாமே பெண்களை சிக்க வைக்கும் அபாய வலை என்பதை சொல்லும் படம் தான் இது. படம் விரைவில் வெளி வர உள்ளது.” என்றார்.

Related News

4426

ஷேனிடம் நிறைய கற்றுக் கொண்டேன் - நடிகர் சாந்தனு
Saturday September-20 2025

தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...

நடிகர் ரோபோ சங்கர் மறைவு! - திரையுலகம் அதிர்ச்சி
Thursday September-18 2025

பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...

ஜீ5-ன்‘வேடுவன்’ இணையத் தொடர் அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது
Wednesday September-17 2025

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ  அறிவிப்பை வெளியிட்டுள்ளது...

Recent Gallery