விஜய், அஜித் ஆகியோரின் ஆரம்ப காலத்தில், அவர்களுக்கு ஜோடியாக நடித்த நடிகைகள் சிலர் தற்போது ஆள் அட்ரஸ் இல்லாமல் போய் விட்டாலும், அவர்கள் இன்னமும் முன்னணி நடிகர்களாகவே வலம் வருகிறார்கள்.
இதற்கிடையே, விஜய் மற்றும் அஜித் ஆகியோருக்கு ஜோடியாக நடித்த சில நடிகைகள் அவ்வபோது, சினிமாவில் மீண்டும் நடிக்க விரும்பி வாய்ப்பு தேடுவதோடு, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு தூதுவிடுவதும் உண்டு. அந்த வகையில், சமீபத்தில் ஒரு நடிகை தூதுவிட்டிருக்கிறார்.
அவர் தான், நடிகை ஸ்வாதி. அஜித் மற்றும் விஜய்க்கு ஜோடியாக சில படங்களில் நடித்த ஸ்வாதி, பல படங்களில் ஹீரோயினாக் நடித்து வந்த நிலையில், சில படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வந்தார். பிறகு திருமணம் செய்துக் கொண்டு சினிமாவுக்கு முழுக்கு போட்டவர், இறுதியாக அமீர் ஹீரோவாக நடித்த ‘யோகி’ படத்தில் நடித்தார். அப்படம் வெளியாகி 10 வருடங்கள் ஆனாலும், தொடர்ந்து சினிமாவில் நடிக்க ஸ்வாதி முயற்சித்துக் கொண்டு தான் இருக்கிறார்.
தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றிய ஸ்வாதி, தற்போது தமிழ் சினிமாவில் நடிக்க விரும்புவதோடு, தொலைக்காட்சி தொடர்களிலும் நடிக்க விரும்புகிறாராம். இது தொடர்பாக, பி.ஆர்.ஓ மூலம் சினிமா பிரமுகர்களுக்கு ஸ்வாதி தூது விட்டிருக்கிறார்.
கடந்த 10 வருடங்களாக தமிழ் சினிமாவில் மீண்டும் நடிப்பதற்காக காத்திருக்கும் ஸ்வாதி, பொருத்தது போதும் என்று பொங்கி எழுந்திருக்கிறார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...