சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற மெகா தொடரில் நாயகியாக நடித்தவர் வாணி போஜன். மாடலிங் துறை மூலம் தனது பயணத்தை தொடங்கிய வாணி போஜனுக்கு தெய்வ மகள் சீரிய பெரிய அளவில் ரீச் கொடுத்தது.
தமிழகத்தின் பெண்கள் மற்றும் இளைஞர்களிடம் பிரபலமடைந்த வாணி போஜன், சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே பல சினிமா வாய்ப்புகள் வந்தாலும், நல்ல வாய்ப்புக்காக காத்திருந்தார்.
இதற்கிடையே, ‘தெய்வ மகள்’ சீரியல் முடிந்ததும் வேறு எந்த சீரியலிலும் கமிட் ஆகாமல் சினிமா வாய்ப்புக்காக காத்திருந்த வாணி போஜனுக்கு வாய்ப்புகள் பல வந்தாலும் அவை திருப்திகரமானதாக இல்லை. சரியான படத்தின் மூலம் அறிமுகமானல் மட்டுமே கோடம்பாக்கத்தில் சிறுது காலமாவது வண்டி ஓட்ட முடியும் என்பதை புரிந்துக் கொண்ட வாணி போஜனுக்கு அவர் நினைத்தது போலவே வாய்ப்பு ஒன்று கிடைத்துள்ளது.
ஆம், வாணி போஜன் விரைவில் வெள்ளித்திரையில் நாயகியாக அறிமுகமாகப் போகிறார். வைபவ் ஹீரோவாக நடிக்கும் படத்தில் வாணி போஜன் ஹீரோயினாக ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே, டிவி-யில் பிரபலமாக இருந்த ப்ரியா பவானி சங்கர், வைபவுடன் ‘மேயாத மான்’ படத்தில் நடித்து சினிமாவில் பிரபலமடைந்ததால், வாணி போஜனும் வெள்ளித்திரையில் ஜொலிப்பார் என்று எதிர்ப்பார்ப்பக்கபடுவதோடு, தன்னை தேடி வரும் சீர்யல் வாய்ப்புகளை நிராகரிக்கும் வாணி போஜன் இனி எல்லாமே சினிமா, தான் என்று கூறி வருகிறாராம்.
இப்படத்தை நடிகர் நிதின் சத்யா தயாரிக்கிறார். இவர் ஏற்கனவே ஜெய்யை வைத்து தயாரித்த ’ஜருகண்டி’ தோல்வியடைந்தாலும், தொடர்ந்து படம் தயாரிப்பதில் தீவிரம் காட்டுகிறாராம்.

சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...