தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாரான நயன்தாராவின் ‘அறம்’ வெற்றி பிறகு அவர் நடிக்கும் படங்கள் மீது பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டு வருகிறது. நயன்தாரா நடிக்கும் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அனைத்தும் தொடர்ந்து வெற்றி பெறுவதோடு, பாக்ஸ் ஆபிஸிலும் சக்கைபோடு போடுவதால், முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக அவரது படங்களை விநியோகஸ்தர்கள் ரிலீஸ் செய்கிறார்கள்.
இந்த நிலையில், நயன்தாராவின் நடிப்பில், சர்ஜூன் இயக்கத்தில் வரும் மார்ச் 28 ஆம் தேதி வெளியாக உள்ள ‘ஐரா’ படத்தின் மூலம் நயன்தாரா தனது மாஸை காட்ட இருக்கிறார். ஆம், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டுமே அதிகாலை சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டு வந்த நிலையில், நயன்தாராவின் ‘ஐரா’ படமும் சென்னையின் பல திரையரங்குகளில் அதிகாலை 5 மணிக்கு சிறப்பு காட்சி திரையிடப்பட உள்ளது.
கே.ஜெ.ஆர் ஸ்டுடியோஸ் சார்பில் கொடப்பாடி ஜெ.ராஜேஷ் தயாரிப்பில் பிரம்மாண்டமான படமாக உருவாகியுள்ள இப்படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
நயன்தாரா முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் கலையரசன், யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...