ஜல்லிக்கட்டு போராட்டத்தின் வீரியம் மற்றும் விஸ்வரூபத்தை தொடர்ந்து, இந்தியா முழுவதும் போராட்டம் என்றாலே அரசுக்கும், காவல் துறைக்கும் காய்ச்சல் வந்து விடுகிறது. இதனால், போராட்டம் என்று யாராவது கிளம்பினால் அவர்களை ஆரம்பத்திலேயே ஆப் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பிரபல தெலுங்கு நடிகரான மோகன் பாபு, கல்லூரி மாணவர்களுடன் இணைந்து மாபெரும் போராட்டம் ஒன்றை நடத்த இருந்த நிலையில், அவர் தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்ட நடிகர் மோகன் பாபு, ஸ்ரீ வித்யனிகேத்தன் பொறியியல் கல்லூரி மாணவர்களுடன் இணைந்து ஒரு பெரிய போராட்டத்தை திருப்பதியில் நடத்த இருப்பதாகவும், அந்த போராட்டம் தெலுங்கு தேசம் கட்சி அரசுக்கு எதிரான போராட்டம், என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த விஷயத்தை அறிந்த போலீசார், விபரீதம் ஏதும் ஏற்படும் முன்பாகவே, மோகன் பாபுவை ஹவுஸ் அரெஸ்ட் செய்திருக்கிறார்கள். மோகன் பாபு போராட்டத்தில் கலந்துக் கொள்வதை தடுப்பதற்காக செய்யப்பட்டுள்ள ஹவுஸ் அரெஸ்ட்டில் அவரது மகன் மஞ்சு மனோஜும் உள்ளார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...