ரஜினி, கமல், விஜய், அஜித் போன்ற முன்னணி ஹீரோக்களின் படங்கள் ரிலிஸின் போது, அவர்களது கட் அவுட்டுக்கு, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்வதற்கு, சில அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, நடிகர்கள் தங்களது ரசிகர்களிடம் இனி பாலாபிஷேகம் வேண்டாம், என்று கோரிக்கை விடுத்ததால், சிலர் அதை கைவிட்டாலும், சில ரசிகர்கள் மட்டும் அதை இன்னும் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறார்கள்.
இப்படி, முன்னணி நடிகர்களுக்கு செய்யப்பட்ட இந்த பாலாபிஷேகம் தற்போது சில நடிகைகளுக்கும், ஏன், சில நேரங்களில் அறிமுக நடிகர்களின் கட் அவுட்களுக்கும் அது நடக்கிறது.
இந்த நிலையில், தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ள யோகி பாபுக்கும் பாலாபிஷேகம் வைபவத்தை நடத்த ரசிகர்கள் முடிவு செய்தார்கள். யோகி பாபு நடிப்பில் இன்று வெளியாகியுள்ள ‘பட்டிபுலம்’ என்ற படம் ஓடும் சென்னை ரோகி திரையரங்கில் வைக்கப்பட்டிருக்கும் யோகி பாபு கட் அவுட்டுக்கு அவரது ரசிகர்கள் இன்று பாலாபிஷேகம் செய்வதாக இருந்தார்கள்.
இன்று மாலை 3.30 மணியளவில் பாலிபிஷேகம் செய்வதாக ரசிக்ர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த நிலையில், தற்போது யோகி பாபு கட் அவுடுக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுவிட்டது. இந்த தடையை போட்டது வேறு யாருமில்லை, நடிகர் யோகி பாபு தான்.
பாலாபிஷேகம் என்ற பெயரில் உணவு பொருளை வீணாக்காதீர்கள், என்று ரசிகர்களிடம் யோகி பாபு வைத்த அன்பு வேண்டுகோளால், அவரது கட் அவுட்டுக்கு நடைபெற இருந்த பாலாபிஷேககத்தை ரசிகர்கள் சோகத்தோடு ரத்து செய்துவிட்டார்கள்.
பேஷன் ஸ்டுடியோஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்திருக்க, அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா நடிப்பில் வெளியான 'தாய் கிழவி' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது...
வ்யோம் என்டர்டெயின்மென்ட்ஸ் (Vyom Entertainments) நிறுவனம் சார்பில் விஜயா சதிஷ் மற்றும் ஆர்...
மலையாள சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்க, மிகப்பெரிய படைப்பாக உருவாகி வரும் ’பேட்ரியாட்' திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடித்துள்ள கதாபாத்திரத்தின் சிறப்பு போஸ்டர் பெண்கள் தினத்தை முன்னிட்டு நேற்று முன் தினம் வெளியிடப்பட்டுள்ளது...