நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘கொலையுதிர் காலம்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நயன்தாரா உள்ளிட்ட படக்குழுவினர் யாரும் பங்கேற்கவில்லை. அதே சமயம், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, எஸ்.எஸ்.துரைராஜ், இயக்குநர்கள் பிரவீன்காந்த், கரு. பழனியப்பன், நடிகர்கள் சாம், ராதாரவி உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டர்கள்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள் தயாரிப்பாளர்கள் சங்க விவகாரத்தை பற்றி பேசுகையில், ராதாரவி நடிகை நயன்தாராவை இழிவுப்படுத்தும் வகையில் நக்கலாக பேசினார்.
ராதாரவி, நயன்தாரா பற்றி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், அவருக்கு நடிகர் சங்கம் சார்பாக கண்டனம் தெரிவிக்கப்பட்டிருப்பதோடு, நடிகைகள், நடிகர்கள் என பலர் அவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் ராதாரவியின் கண்டத்துக்குரிய பேச்சை கண்டித்துள்ள திமுக, அவரை கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியுள்ளது.
இது தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டத்தை தெரிவித்திருப்பதோடு, ”பெண்ணுரிமை முன்னிறுத்தும் திமுகவில் அங்கம் வகிக்கும் நடிகர் ராதாரவியின் திரைத்துறை சார்ந்த பெண் கலைஞர்கள் குறித்த கருத்து ஏற்க இயலாதது. கடும் கண்டனத்திற்குரியது. கழகத்தினர் யாவரும் கண்ணியம் குறையாத வகையில் கருத்துகளை தெரிவிக்க வேண்டும். மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...