சசிகுமார் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் தயாரித்து ஹீரோவாக நடிக்கும் படம் ‘கொடிவீரன்’. இப்படத்தை முத்தையா இயக்குகிறார். ஏற்கனவே சசிகுமாரை வைத்து ‘குட்டிப்புலி’ படத்தை இயக்கிய முத்தையா இப்படத்தின் மூலம் இரண்டாவது முறையாக சசிகுமாருடன் இணைந்துள்ளார்.
இதில், மகிமா நம்பியார், பூர்ணா, சனுஷா, விதார்த் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்க, வில்லனாக ஆக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பதாக இருந்தது. இது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், அர்ஜுன் அந்த வேடத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டாராம். அர்ஜுன் கதாபாத்திரத்தில் பசுபதியை நடிக்க வைக்க முயற்சித்த படக்குழுவினருக்கு பசுபதி, கதையை கேட்டுவிட்டு ஓகே சொல்லிவிட்டார்.
பசுபதியின் வேடம் வெறும் வில்லனாக மட்டும் இன்றி, ஹீரோவுக்கு இணையான வேடமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...