தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர் மற்றும் நடிகராக வலம் வருபவர் பார்த்திபன். தனது முதல் படமான ‘புதியபாதை’ மூலம் ஒட்டு மொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்த இவர் இயக்கம் மற்றும் நடிப்பில் வெளியாகும் படங்கள் தனி ரகமாக இருக்கும். இவரது மனைவி நடிகை சீதா என்பதும், இவர்கள் இருவருக்கும் விவாகரத்தாகிவிட்டது என்பது அனைவரும் அறிந்ததுதான்.
இதற்கிடையே, பார்த்திபன் - சீதா தம்பதியின் மூத்த மகள் அபிநயாவுக்கும், நடிகர் எம்.ஆர்.ராதாவின் கொள்ளுபேரனும், நடிகர் எம்.ஆர்.ஆர்.வாசுவின் பேரனுமான நரேஷ் கார்த்திக்கு நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
ஏறகன்வே, பார்த்திபன் - சீதா தம்பதியின் இளையமகளான கீர்த்தனாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், அவர்களது மூத்த மகள் அபிநயாவுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் நடிகர்கள் ராதாரவி, கார்த்தி, இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் என ஏராளமான திரையுலக பிரமுகர்கள் கலந்துக் கொண்டார்கள்.
பார்த்திபனும், சீதாவும் பிரிந்து வாழ்ந்து வந்தாலும் மகள்கள் திருமணத்திற்கு தங்களுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாட்டை மறந்து ஒன்றாக கலந்துக் கொள்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...