‘அறம்’, ‘மாயா’, ‘டோரா’, ‘கோலமாவு கோகிலா’ என்ற ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் நயன்தாரா, லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகர்களுடன் போட்டு போடும் அளவுக்கு உயர்ந்துள்ளார்.
இதற்கிடையே, கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் கோட்டபாடி ஜே.ராஜேஷ் தயாரிப்பில், சர்ஜுன் இயக்கத்தில் நயன்தாரா, முதல் முறையாக இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ‘ஐரா’ பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நயன்தாரா, மாறுபட்ட கதாபாத்திரமாக பவானி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பதும், சமீபத்தில் வெளியான இப்படத்தின் டிரைலரில் அவர் பேசிய சமூக வலைதளங்களை கலாய்க்கும் விதமும் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த நிலையில், வரும் மார்ச் 28 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘ஐரா’ தமிழகத்தில் மட்டும் சுமார் 700 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னணி ஹீரோக்களின் படங்கள் மட்டுமே இத்தனை எண்ணிக்கையிலான திரையரங்கில் வெளியான நிலையில், நயன்தாராவின் படங்களுக்கு ரசிகர்கள் கொடுக்கும் ஆதரவால், அவரது படத்தை மிகப்பெரிய அளவில் வெளியிடுகிறார்கள்.
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் வெளியிடும் ‘ஐரா’ படத்தின் புக்கிங் நாளை (மார்ச் 26) முதல் தொடங்குகிறது.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...