சன் மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது மீடியா பயணத்தை தொடங்கிய பிரஜின், சீரியல், சினிமா என்று தனது பயணத்தை தொடர்ந்துக் கொண்டிருக்கிறார். அவரது காதல் மனைவி சாண்ட்ராவும், டிவி மற்றும் சினிமா என்று தொடர, இருவருக்கும் சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் லட்சியம்.
தற்போது ‘சின்ன தம்பி’ என்ற தொடரில் பிரஜின் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். சாண்ட்ரா, நடிப்புக்கு சிறிது காலம் பிரேக் கொடுத்திருக்கிறார். இதற்கு காரணம், குழந்தை தான். ஆம், பிரஜின் மற்றும் சாண்ட்ராவுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகும் நிலையில், கடந்த வருடம் தான் சாண்ட்ரா கர்ப்பம் தரித்தார். இந்த தகவலை வெளியிட்டு தனது சந்தோஷத்தை பிரஜின் பகிர்ந்துக் கொண்டார்.
இந்த நிலையில், பிரஜின் - சாண்ட்ரா தம்பதிக்கு சமீபத்தில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக பிரஜின் வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை குழந்தை பிறந்திருப்பதால் பிரஜின் - சாண்ட்ரா தம்பதி இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார்களாம்.
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...