‘தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும்’, ‘பாயும் புலி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா, பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பெரிய அளவில் பிரபலமடைந்ததோடு, அவரை தேடி பல சினிமா வாய்ப்புகளும் வரத்தொடங்கியுள்ளது.
தற்போது ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவண்டா’.’அலேகா’, ‘கன்னித்தீவு’ ஆகிய படங்களில் ஐஸ்வர்யா தத்தா நடித்து வருகிறார்.
இந்த நிலையில், ‘அலேகா’ பட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமித்ரனுக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கும் இடையே படப்பிடிப்பில் மோதல் ஏற்பட்டுள்ளது.
படப்பிடிப்புக்கு தினமும் ஐஸ்வர்யா தத்தா தாமதமாக வருவதாக கூறப்படுகிறது. அவருக்காக மற்ற நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் காத்திருக்க வேண்டி இருந்ததாம். இதை தொடர்ந்து, அவரிடம் சரியான நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வருமாறு இயக்குநர் அறிவுறுத்தியிருக்கிறார். ஆனால், இதை கேட்காத ஐஸ்வர்யா தத்தா, தொடர்ந்து தாமதமாக வர, ஒரு கட்டத்தில் பொருமை இழந்த இயக்குநர் அவரை கண்டிக்க, அவரிடம் ஐஸ்வர்யா தத்தா வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட படப்பிடிப்பு தளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆரி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரில், போர்வைக்குள் ஆண் மற்றும் பெண்ணின் கால்கள் மட்டும் தெரியும்படியான புகைப்படம் வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து பெரும் சர்ச்சை எழுந்தவுடன், படக்குழு இது காம படம் அல்ல காதல் படம் என்று விளக்கம் அளித்தார்கள்.
தற்போது இயக்குநருக்கும், ஐஸ்வர்யா தத்தாவுக்கு இடையே ஏற்பட்ட மோதலாலும், இப்படம் தொடர்பாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தயாரிப்பாளர் சாந்தோஷ் டி.குருவில்லா மற்றும் தயாரிப்பாளர் பினு ஜார்ஜ் அலெக்சாண்டர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தான் பல்டி...
பிரபல திரைப்பட காமெடி நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று உயிரிழந்தார்...
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5, தனது அடுத்த அதிரடி தமிழ் ஒரிஜினல் சீரிஸான “வேடுவன்” சீரிஸ், வரும் அக்டோபர் 10 ஆம் முதல் ஸ்ட்ரீமாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது...