தனக்கு மட்டுமே பேசத் தெரியும், என்ற நினைப்பில் மைக் கிடைத்துவிட்டால், எந்த இடத்தில், எதற்காக வந்தோம் என்பதையும் மறந்துவிட்டு கண் மூடித்தனமாக பேசும் ராதாரவி, நயன்தாரா விவகாரத்தில் வசமாக சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறார்.
சீனியர் நடிகர், என்ற இமேஜை கொடுத்துக் கொண்ட அவரை, தற்போது இளம் நடிகைகள் பலர் வச்சு செய்கிறார்கள். ஏற்கனவே, பல நடிகர் நடிகைகள் ராதாரவிக்கு கண்டனும், எதிர்ப்பும் தெரிவித்து வந்த நிலையில், ராதாரவி தனது தவறை உணர்ந்து வருத்தம் தெரிவித்து விட்டார்.
இந்த நிலையில், நடிகை சமந்தா ராதாரவியை மரண கலாய் கலாய்த்து ட்வீட் செய்திருப்பது வைரலாகியுள்ளது.

நயன்தாரா விவகாரம் தொடர்பாக ராதாரவிக்கு தனது கண்டத்தை தெரிவித்திருக்கும் சமந்தா, ”அய்யோ பாவம், ராதாரவி அவர்களே, உங்களை நிலைநிறுத்திக் கொள்ள நீங்கள் படும் பாடு இருக்கிறதே... நாங்கள் எல்லோரும் உங்களைப் பார்த்து பரிதாபப் படுகிறோம். பாவமான மனிதர் நீங்கள் உங்கள் ஆன்மாவோ அல்லது உங்களுக்குள் மிச்சமிருக்கும் ஏதோ ஒன்றோ அமைதியை தேடிக் கொள்ளட்டும். நயன்தாராவின் அடுத்த சூப்பர் ஹிட் படத்துக்கு உங்களுக்கு டிக்கெட் அனுப்புகிறோம். பாப் கார்ன் சாப்பிட்டுவிட்டு இளைப்பாறுங்கள்.” என்று தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இன்னும் எத்தனை நடிகைகள், எப்படியெல்லாம் ராதாரவியை கலாய்க்கப் போகிறார்களோ!
சுரஜ் புரொடக்ஷன்ஸ் சார்பில் ரமேஷ் ரெட்டி தயாரிப்பில், டாக்டர்...
60 ஆண்டுகளுக்கும் அதிகமாக இந்தியாவின் மிகவும் நம்பகமான ஆபரண நிறுவனமாக இயங்கி வரும் ஜோஸ் ஆலுக்காஸ், பிரபல நடிகர் துல்கர் சல்மான் தனது பிராண்டின் விளம்பரத் தூதராக இணைந்திருப்பதை பெருமகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது...
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) மற்றும் DRUM TAO ஆகியவை இரண்டாவது முறையாக சென்னைக்கு மறக்க முடியாத ஆற்றல் மற்றும் தாள கலவையை கொண்டு வந்தன, மக்களின் தேவைக்கேற்ப மீண்டும் வந்தன...