கடந்த சில வாரங்களுக்கு முன்பு தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தென்னிந்திய தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் (பெப்ஸி) இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, பெப்ஸி வேலை நிறுத்தத்தை தொடங்கியது. பிறகு பேச்சுவார்த்தை நடந்து வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டு படப்பிடிப்புகள் தொடங்கப்பட்டன.
இந்த நிலையில், திரைப்படம் தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் திரைப்பட தொழிலில் பங்கேற்கலாம், என்று தயாரிப்பாளர் சங்கம் சார்பில் விளம்பரம் கொடுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பெப்ஸி அமைப்பு, கடந்த சில தினங்களுக்கு முன்பு மீண்டும் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கியதோடு, இன்று (செப்.05) சென்னை கண்டன ஆர்பாட்டத்தையும் நடத்த திட்டமிட்டிருந்தது.
இதற்கிடையே, தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம் மற்றும் பெப்ஸி அமைப்பினரிடையே நேற்று இரவு பேச்சு வார்த்தை நடைபெற்றது. நள்ளிரவு 12 மணி வரை நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையில் சுமூகமான முடிவு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலமாக, பெப்ஸி அமைப்பு இன்று நடத்த இருந்த கண்டன ஆர்பாட்டத்தை கைவிட்டதோடு, வரும் வெள்ளிக்கிழமை வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பத்திரிகையாளர், திரைப்பட மக்கள் தொடர்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர், நடிகர் விஜய்யின் பி ஆர் ஓ'வாக பல வருடங்கள் பணியாற்றி அவரது வளர்ச்சிக்கு துணை நின்றவர், சமூகச் செயற்பாட்டாளர் என பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரரான பி டி செல்வகுமார் நிறுவி நிர்வகிக்கும் சமூக சேவை அமைப்பு கலப்பை மக்கள் இயக்கம்...
அர்ஜுன் ஜன்யா இயக்கத்தில் கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்கள் டாக்டர்...
நவம்பர் 1 மற்றும் 2-ம் தேதிகளில் ராயப்பேட்டையில் உள்ள THE MUSIC ACADEMY-யில் 3-வது ஆண்டாக PROVOKE ART FESTIVAL 2025 கோலாகலமாக நடைபெற்றது...